முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளராக நியமனம்

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.- 27 - உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பா.வளர்மதி அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு இலக்கிய அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:- அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருக்கும் பா.வளர்மதியும், கோவை மாநகர் மாவட்ட கழக அவைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் ஏ.கே.செல்வராஜும், தருமபுரி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.பழனியப்பனும் இன்று (நேற்று) முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.  அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் பி.பழனியப்பனும் (உயர்கல்வித்துறை அமைச்சர்), அ.தி.மு.க. விவசாயப் பிரிவு செயலாளர் பொறுப்பில் கு.தங்கமுத்துவும் (முன்னாள் வாரியத் தலைவர்- தஞ்சாவூர் மாவட்டம்), அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளர் பொறுப்பில் பா.வளர்மதியும் (சமூகநலத்துறை அமைச்சர்), அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பொறுப்பில் ஏ.கே.செல்வராஜும் (முன்னாள் அமைச்சர்- கோவை மாநகர் மாவட்டம்) இன்று (நேற்று) முதல்  நியமிக்கப்படுகிறார்கள்.  இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.       

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago