முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.எஸ். கிரானைட் நிறுவனத்தின் 14 வாகனங்கள் பறிமுதல்

திங்கட்கிழமை, 15 அக்டோபர் 2012      ஊழல்
Image Unavailable

 

மேலூர், அக். 15 - முறைகேட்டில் ஈடுபட் டதாக கூறப்படும் பி.எஸ். கிரானைட் நிறுவனத்தின் 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டன. கடந்த தி.மு.க ஆட்சியில் மதுரை மாவட்டம்  கீழவளவு உள்ளிட்ட கிராமங்களில் நடந்த கிரானைட் முறைகேடுகள் நாள்தோறும் அம்பலத்து க்கு வந்து கொண்டே இருக்கின்றன. இந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக பி.பழனிச் சாமி கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக் கப்பட்டுள்ளார். டாமின் சுரங்கத்தில்  கிரானைட் கற்களை திருடியதாக ஒலம்பஸ் கிரானைட் நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவன த்தின் இயக்குனராக இருந்த தயாநிதி அழகிரி மற்றும் நாகராஜன் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் கிரானைட் அதிபர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. தனியார் கிரானைட் நிறுவனங்களின் சொத்துக் களை முடக்கும் வகையில் மாவட்ட எஸ்.பி. பால கிருஷ்ணன் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் மேலூரில் பி.எஸ். கிரானைட் நிறுவனத்துக்கு சொந்தமான 14 வாகன ங்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்க ப்பட்டுள்ளன. அதாவது 4 டிப்பர் லாரிகள், ஒரு வேன், ஒரு லாரி, ஒரு டிரைலர் லாரி, ஒரு கம்ப்ரசர், 4 கார்கள், ஒரு டிராக்டர், ஒரு பிக் அப் வேன் என மொத்தம் 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்க ப்பட்டன. இந்த வாகனங் கள் பி.எஸ். கிரானைட் நிறுவனத்தின் அலுவலகம் அருகே உள்ள ஷெட்டில் இருந்தும், அந்த கிரானைட் நிறுவன உரிமையாளர் பெரியசாமி வீட்டின் அருகில் இருந்த ஷெட்டி லும் பறிமுதல் செய்யப் பட்டது. ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் அன்ன ராஜ், வி.ஏ.ஓ. மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலை யில் இந்த வாகனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago