எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.- 15 - அரசியலுக்கு தான் ஏன் வரவில்லை என்று நடிகர் ரஜினி காந்த் நேற்று முன்தினம் விளக்கம் அளித்தார். சென்னை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில், ரஜினியின் 63 -வது பிறந்த நாள் விழா சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. விழாவில் ரஜினிகாந்த்தை வாழ்த்தி தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், ராதா ரவி, வாகை சந்திரசேகர், லாரன்ஸ், கலைப்புலி எஸ்.தாணு, எஸ்.வி.ரமணன், பாண்டு, நமீதா, உட்பட பலர் பேசினர். விழாவில் ரஜினி பேசியதாவது:- ஒவ்வொரு வருடமும் என் பிறந்த நாள் அன்று சென்னையில் இருக்க மாட்டேன். இதற்கு முக்கிய காரணம், 22 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு துயரமான சம்பவம் தான், அப்போது நடந்த என் பிறந்த நாள் விழாவுக்கு வெளியூரிலிருந்து வந்த 3 பேர் ஊருக்கு திரும்பிச் சென்ற போது, விபத்தில் சிக்கி இறந்தனர். அதற்குப் பிறகு தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன். என் பிறந்த நாளில் வெளியூருக்கு சென்று விடுவேன். அங்கு தனியாக அமர்ந்து, இதுவரை நான் என்ன செய்தேன்? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன்? இனி என்ன செய்யப்போகிறேன்? என்று நினைத்துப் பார்ப்பேன். என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. அது ஆண்டவன் கையில் இருக்கிறது. மிகப் பெரிய பிளான் போட்டால், அது நடக்காது. மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்று ஒருவன் நினைத்தால், அப்படியே நடந்து விடாது. அதிகமாக சம்பாதிக்கலாம். அல்லது அதைவிட குறைவாக சம்பாதிக்கலாம். இதிகாசம், புராணங்களில் கூட நினைத்தது அப்படியே நடந்து விடாது. நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை அபூர்வமாக வரும் 12.12.12 அன்று என் பிறந்த நாளில் என் உயிரினும் மேலான ரசிகர்களை சந்தித்தது அதிக மகிழ்ச்சி அளித்தது. ஆனால், இது நடக்குமா என்று சந்தேகமாக இருந்தது. காரணம், என் உயிர் நண்பன், எனக்கு அனுமான் மாதிரி துணையாக இருந்த காந்தி, 10 -ம் தேதி ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். 11 -ம் தேதி உடல் அடக்கம் நடந்தது.
மறுநாள் காலையில் என் பிறந்த நாள் 11 -ம் தேதியே ரசிகர்களுக்கு தகவல் சொல்லியாகி விட்டது. ஒரு நானூறு பேர் காலையிலேயே என் வீட்டுக்கு வந்து விட்டார்கள். உடனே நான் குளித்து முடித்து அவர்களைப் பார்க்க வந்துவிட்டேன். ரசிகர்களைப் பார்த்த பிறகு தான் மகிழ்ச்சி ஏற்பட்டது. காந்தி இறந்த கவலையில் மூழ்கியிருந்த நான் அதிலிருந்து வெளியே வர ஆரம்பித்தேன். ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த வலியை தீர்த்திருக்க முடியாது. ரசிகர்களை சந்தித்துப் பேசியபோது, அவர்கள் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்ட போது கிடைத்த சந்தோஷம் எல்லாம் ஆண்டவன் செயல்தான்.
சத்யநாராயணாவை நான் மன்றத்தை விட்டு ஒதுக்கி வைத்து விட்டேன். ஏன்றெல்லாம் சொன்னார்கள். அவர் இவ்வளவு நாட்கள் ஓய்வு எடுத்தார். காரணம், உடல்நிலை சரியில்லை, அவர் வந்தால் தான் ரசிகர்களை கட்டுப்பாடாக வைத்திருக்க முடியும் என்று அவரை வரவழைத்தேன். என் ரசிகர்கள் பவர்புல் ஆட்கள் என்பது எனக்கு தெரியும். அரசியல் கடல் மாதிரி. அதுபற்றி நான் பேசவிரும்பவில்லை. தமிழ் ரசிகர்கள் தான் என்னை வாழவைத்தார்கள். அவர்கள் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும். 1996 -ல் எனக்கு நடந்த பிரச்சனை பற்றி எல்லாருக்கும் தெரியும். அதற்குப் பிறகு என் பெயரையோ, போட்டோவையோ ரசிகர்கள் பயன்படுத்தக் கூடாது என்று சொன்னேன். பிறகு ஒரு முறை என் படத்துக்கு ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். அதுவும் ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் அவர்கள் சொன்ன பாயிண்ட் ரொம்ப நல்ல பாயிண்ட் அதற்குப் பிறகு நான் நடிக்கின்ற படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சியை வைக்கவில்லை. அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தது வேண்டுமானால் வேறுவிதமாக இருக்கலாம். ஆனால் அவர்கள் சொன்ன கருத்து நல்ல கருத்து. என் குரு சச்சிதானந்த சுவாமிகள் தலையெழுத்து பற்றி அடிக்கடி சொல்வார். ஒரு நாட்டுக்கு யார் தலைவராக வர வேண்டும்? யார் ஆள வேண்டும் என்பது தலையெழுத்துப் படியே நடக்கும். அரசியலில் நேரம் ரொம்ப ரொம்ப முக்கியம். இல்லை என்றால் காமராஜர் மாதிரி ஒரு நல்ல தலைவர் தோற்றிருக்க முடியுமா? உடம்பு சரியில்லாமல் இருந்த போது நிறைய விஷயங்களை டாக்டர்களின் ஆலோசனைப்படி என்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டார்கள் பிறகு சென்னைக்கு வந்தவுடன் எல்லா நியூஸ் பேப்பர்களையும், பேப்பர் கட்டிங்குகளையும் பார்த்தேன். ரசிகர்கள் நான் நலம்பெற வேண்டும் என்று கோயில், கோயிலாகச் சென்று வேண்டியதையும், பிரார்த்தனை செய்தததையும் படித்து தெரிந்து கொண்டேன். அவர்கள் என் மீது கொண்ட இந்த அன்புக்கு எப்படி ரியாக்ட் பண்றது என்று தெரியவில்லை. இங்கே பேசிய ராதாரவி, நான் நலம் பெற ஒரு வாரம், விரதம் இருந்ததாக சொன்னார். அதற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
சந்திரமுகிக்கு பிறகு சிவாஜி, அதற்குப் பிறகு எந்திரன், படத்தில் நடித்தேன். வேட்டையன் கேரக்டரும் மொட்டைபாஸ் கேரக்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதால், அடுத்து உருவாக்க இருந்த ராணா படத்தில் வில்லனாக நடிக்க முடிவு செய்தேன். அப்போது எனக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே மருத்துவமனையில் சேர்ந்தால், தேவையில்லாத வதந்திகள் வரும் என்று தள்ளிப்போட்டுக் கொண்டே வந்ததால் ஏற்பட்ட விளைவு இது. நான் கண்டக்டராக இருந்த போது நிறைய மது அருந்தியதுண்டு. அப்போது சில நண்பர்களின் தூண்டுதலால் இது நடந்தது. சினிமாவில் நடிக்க வந்த பிறகு நல்ல சரக்கு குடித்தேன். பிறகு இடைவிடாத ஷூட்டிங்கில் கடுமையாக உழைத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டது. அப்போது நடந்தது பற்றியும் ரசிகர்களுக்கு தெரியும். பிறகு லதாவை திருமணம் செய்தேன். மது அருந்துவதை குறைத்தேன். யோகா, உடற்பயிற்சி என என் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டேன். ஆனால் அளவுக்கதிகமாக சிகரெட் பிடித்தேன். அதனால் வந்த வினை தான் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. நுரையீரல் பாதிப்பை தொடர்ந்து கிட்னியில் பிரச்சனை ஏற்பட்டது. முதலில் சென்னையிலும், பிறகு சிங்கப்பூரிலும் சிகிச்சை பெற்றேன். இந்த நேரத்தில் ரசிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது இது தான் தயவுசெய்து சிகரெட் பிடிக்காதீர்கள். அதை இன்றே, இப்போதே விட்டு விடுங்கள். தொடர்ந்து நான் மருந்துகளும், மாத்திரைகளும் எடுத்துக்கொண்டதால், சில மாதங்களாக உடம்பு வீக் ஆகிக்கொண்டே வந்தது. உடனே மருத்துவ முறையை மாற்றினேன். இப்போது சொல்கிறேன். கடந்த ஓரிரு மாதங்களாக ரொம்ப நன்றாக இருக்கிறேன். டாக்டர்களே கூட இது ஒரு மிராக்கிள் என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள்.
நான் உடல்நிலை தேறிவந்ததற்கு முக்கியமான காரணம், ரசிகர்களின் அன்பும், பிராத்தனையும் தான். என் ரசிகர்களாகிய நீங்கள் முதலில் உங்கள் தாய் தந்தையரை கவனியுங்கள். நமக்கு நம் வீடுதான் சொர்க்கம். பெற்றோரை வணங்குங்கள். அவர்களின் காலில் விழுந்து வணங்கி அவர்களுடைய ஆசிகளைப் பெறுங்கள். எனது பிறந்த நாளை உங்கள் பெற்றோரை வணங்கும் நாளாக நினைத்தால் அதுவே எனக்குப் போதும். இவ்வாறு ரஜினி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ராகுல் நாளை சென்னை வருகை
19 Feb 2026சென்னை, காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி நாளை (பிப். 21) சென்னை வரவுள்ளதாக உறுதி செய்யப்படாதத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இந்தியா எண்ணெய் வாங்குகிறதா? ரஷ்யா தரப்பில் விளக்கம்
19 Feb 2026மாஸ்கோ, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
மத்திய-மாநில உறவு குறித்த உயர்நிலைக் குழுவின் முக்கிய பரிந்துரைகள்
19 Feb 2026சென்னை, பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தக்கூடாது உள்ளிட்ட முக்கிய பரிந்துரைகள் மத்திய-மாநில உறவு குறித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கையில்
-
அசாம், காமாக்யா கோவிலில் பிரியங்கா காந்தி வழிபாடு
19 Feb 2026டெல்லி, காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி காமாக்யா கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
-
சீனாவில் பட்டாசு கடையில் திடீர் தீவிபத்து - 12 பேர் பலி
19 Feb 2026பெய்ஜிங், சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோக நிகழ்வாக பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
-
தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் தி.மு.க.வுடன் கூட்டணி பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
19 Feb 2026சென்னை, தேமுதிக யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு விடையாக தி.மு.க.வுடன் கூட்டணி என தெரிவிக்கிறோம்.
-
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.: தமிழ்நாடு காங்கிரஸ் வரவேற்பு
19 Feb 2026சென்னை, தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது இதற்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளித்துள்ளனர்.
-
மகாராஷ்டிராவில் முஸ்லிம் இடஒதுக்கீடு ரத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்திற்குள் தே.ஜ.கூ. வந்தால் அனைவரின் இடஒதுக்கீடும் காலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
19 Feb 2026சென்னை, தமிழ்நாட்டுக்குள் தேசிய ஜனநாயகக் கூட்டணி வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா?
-
வருகிற மார்ச் 12-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த தஞ்சாவூர் பொதுக்கூட்டம் ரத்து
19 Feb 2026திருச்சி, திருச்சியில் வரும் மார்ச் 11-ம் தேதி பிரதமர் பங்கேற்க விருக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் பேரை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதல் முறையாக தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க.: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் உறுதி
19 Feb 2026சென்னை, வரும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதல் முறையாக தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணநை்திருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தே.மு.தி.க.
-
எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரம்: பிரிட்டன் மன்னர் சார்ல்ஸ் சகோதரர் ஆண்ட்ரூ கைது
19 Feb 2026லண்டன், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில், பிரிட்டன் அரசர் சார்ல்ஸின் சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க என்ற பெயரில் பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சி தொடக்கம்
19 Feb 2026சென்னை, எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கினார்.
-
வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய புயல் சின்னம்: வரும் 22-ம் தேதி 3 மாவட்டங்களில் மழை
19 Feb 2026சென்னை, தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
'தி கேரளா ஸ்டோரி - 2' திரைப்படத்தை தடை செய்ய கேரள முதல்வர் வலியுறுத்தல்
19 Feb 2026திருவனந்தபுரம், கேரள முதல்வர் பினராயி விஜயன் தி கேரளா ஸ்டோரிக்கு எதிராக தன் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
-
உலகின் பெரிய தொழில்நுட்ப மையமாக இந்தியா திகழ்கிறது: ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்
19 Feb 2026சென்னை, உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப மையமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
-
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா புதிய கட்சித் தொடங்குகிறார்
19 Feb 2026ஐதராபாத், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியைத் தொடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. அரசு செய்த சாதனை திட்டங்கள் மீது சவாரி செய்வதா? தி.மு.க அரசுக்கு மீது இ.பி.எஸ் கேள்வி
19 Feb 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- என்ன தான் ஆச்சு இந்த முதல்வருக்கு?
-
இலவசங்களை அறிவிப்பது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
19 Feb 2026புதுடெல்லி, தேர்தலுக்காக இலவசங்களை அறிவிப்பது இன்னும் எத்தனை காலத்திற்கு தொடரும் என்று இலவசங்கள் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்கேள்வி எழுப்பியுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
19 Feb 2026- மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் விழா தொடக்கம், அன்ன வாகனத்தில் ராஜாங்க சேவை.
- ஸ்ரீசைலம், திருவைக்காவூர் கோவில்களில் சிவபெருமான் வீதி உலா.
- திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழ
-
இன்றைய நாள் எப்படி?
19 Feb 2026


