முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை `தெலுங்கானா' அறிவிப்பு வெளியாகுமா?: பதற்றத்தில் ஹைதராபாத்

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

ஹைதராபாத், ஜன. - 28 - தெலுங்கானா தனி மாநில கோரிக்கை குறித்த மத்திய அரசின் முடிவு நாளை அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பினால் ஹைதராபாத்தில் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தெலுங்கானா தனி மாநில கோரிக்கை தொடர்பாக நாளை முடிவு அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அனேகமாக தெலுங்கானா தனி மாநிலம் உதயமாகிவிடும் என்றே கூறப்படுகிறது. அப்படி தெலுங்கானா தனி மாநிலம் உதயமாகுமானால் ாராயலசீமாா என்ற தனி மாநிலத்துக்கான கோரிக்கையும் வலுப்பெறும். அத்துடன் ஹைதராபாத் எந்த பகுதிக்கு தலைநகர் என்ற குழப்பமும் உருவாகும். இத்தகைய பதற்றமான சூழலில் 36 மணி நேர போராட்டத்தை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அறிவித்திருந்தது. இந்த 36 மணி நேர தர்ணா போராட்டத்தில் கலந்து கொள்வதற்கான தெலுங்கானா ராஷ்டிரிய சமியின் தலைவர் சந்திரசேகர்ராவின் மகன் தரகரம ராவ் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் இந்திரா பூங்கா நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். ஆனால் இவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதேபோல் தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக் குழுவினரும் ஹைதராபாத் நகரின் பல இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏக்கள் மகாத்மா காந்தி சிலை முன்பாக அமர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். இந்தப் போராட்டத்தில் பெருமளவிலான பெண்களும் கலந்து கொண்டுள்ளனர். இதனால் ஹைதராபாத் நகரமெங்கும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஹைதராபாத் மட்டுமின்றி தெலுங்கானாவின் 10 மாவட்டங்களிலும் போராட்டங்கள் வெடித்திருப்பதால் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தெலுங்கானா பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago