முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகரில் தாய்-தந்தை-தங்கை குடும்பத்துடன் தற்கொலை

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

விருதுநகர், பிப். 22 - விருதுநகரில் கணவன் செக்ஸ்டார்ச்சர் கொடுத்ததால் மனைவி தனது தாய்,தந்தை,தங்கையுடன் விஷமருந்தி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த பர..பரப்பு சம்பவம்வருமாறு

விருதுநகர் முத்தால்நகரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(50). இவரது மனைவி பஞ்சவர்ணம்(40). இவர்களுக்கு புஷ்பவள்ளி(24), மகேஸ்வரி(21) என்ற இரண்டுமகள்கள் உள்ளனர். கடந்த 3 மாதத்திற்கு முன்பு மூத்த மகள் புஷ்பவள்ளிக்கு அதே பகுதியைச்சேர்ந்த ஜெயப்பாண்டி(30) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். திருமணம் செய்து கொடுத்த நாளிலிருந்து ஜெயப்பாண்டி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து மனைவி புஷ்பவள்ளிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். மேலும் வேலை பார்ப்பதாக பொய் சொல்லி திருமணம் செய்தது தெரியவந்தது. மேலும் வேலைக்கு செல்லாமல் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் புஷ்பவள்ளி விருதுநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் இருவரையும் விசாரணை செய்து இணைந்து வாழ்வதற்கு வழி கூறி நேற்று வர கூறியிருந்தனர். 

இந்நிலையில் புஷ்பவள்ளி தனது தாய்,தந்தை,தங்கை என குடும்பத்துடன் ரோக்கர் மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் புகார் கொடுக்கவே போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த புஷ்பவள்ளியை மட்டும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைபலனின்றி புஷ்பவள்ளி பரிதாபமாக உயிர் இழந்தார். 

ஆர்டிஓ விசாரணை நடத்திவருகிறார். இதுகுறித்து விருதுநகர் மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கணவரின் தொடர் செக்ஸ் டார்ச்சரால் ஒரு குடும்பமே பலியான சம்பவம் விருதுநகரில் பெரும் பர..பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago