விடிய விடிய பெண்களுடன் கும்மாளமிடுவார் ஸ்ரீசாந்த்

திங்கட்கிழமை, 20 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, மே.21 - விடிய விடிய பெண்களுடன் கும்மாளமிடுவது தெரியவந்துள்ளது. மேலும் மும்பை ஓட்டலில் அழகிகளுடன் இருந்ததை ரகசியமாக படம் எடுத்து, அதன் மூலம் ஸ்ரீசாந்த்தை சூதாட்டத்தில் ஈடுபடும்படி மிரட்ட தரகர்கள் திட்டமிட்டு இருந்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைதாகியுள்ள வீரர்கள் மற்றும் தரகர்களிடம் டெல்லி தனிப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் இந்த ஆண்டு தொடக்கத்தில் 6 முறை தரகர்கள் அழகிகளை ஸ்ரீசாந்த் மற்றும் அஜித் சண்டிலா ஆகியோருக்கு ஏற்பாடு செய்து கொடுத்த அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.

அதுபோல், ஸ்ரீசாந்த் அழகிகளுடன் இருப்பதை ரகசியமாக வீடியோ படம் எடுத்து அதனைக் காட்டி மிரட்டி அவரை சூதாட்டத்தில் ்டுபடும்படி கட்டாயப்படுத்தவும் தரகர்கள் திட்டமிட்டு இருந்தது அம்பலமாகியுள்ளது.

சில காரணங்களுக்காக இந்த பிளாக்மெயில் திட்டம் தள்ளி வைக்கப்பட்டதாக, ஸ்ரீசாந்த்தின் நண்பர் ஜிஜு போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார்.

மேலும், ஸ்ரீசாந்த் சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் படம் எடுக்கவில்லை என்றபோதும், வேறு சில வீரர்களின் உல்லாச வீடியோ படங்கள் எடுக்கப்பட்டு இருப்பதாக தரகர்கள் தெரிவித்து உள்ளனர்.

போலீஸ் விசாரணையில் ஸ்ரீசாந்த் தினமும் இரவுகளில் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்க விரும்பியதும் தெரிய வந்துள்ளதாம். எனவே, தரகர்கள் கூறியது உண்மையா என்பது குறித்து மேலும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்: