முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜோஷிக்கு எதிராக பிரச்சாரம்: பிரதமருக்கு பா.ஜ.க. கண்டனம்

திங்கட்கிழமை, 2 மே 2011      இந்தியா
Image Unavailable

பாட்னா,மே.- 2 - நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு எதிராக பிரதமர் மன்மோகன்சிங் அவதூறு பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது,  2 ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பான விவரங்களை தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு முன்பாக ஆஜராகுமாறு பிரதமர் அலுவலக அதிகாரிகள், அட்டர்னி ஜெனரல் ஆகியோருக்கு அழைப்பு விடுத்ததில் இருந்து அதன் தலைவர் மீதான பிரதமரின் அவதூறு பிரச்சாரம் தொடங்கியுள்ளது. மேலும் இது தொடர்பான பொது கணக்கு குழு அறிக்கை வெளியாகி அதில் பிரதமர் அலுவலக அதிகாரிகளையும் சேர்த்துள்ளதும் தெரியவந்த பிறகே மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஜோஷி மீது குற்றம் காணும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
காங்கிரசை சேர்ந்த சைபுதீன் சோஸ் பொதுக் கணக்கு குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு எதிரானது. இக்குழவின் தலைவராக எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவரை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். அதே போல ஜோஷிக்கு எதிராக மத்திய அமைச்சர் கபில்சிபல் பேசி வருவதும் அவர் பயன்படுத்தும் வார்த்தைகளும் முறையானதாக இல்லை. ஊழல் தொடர்பான குழுவின் அறிக்கையை இல்லாமல் செய்யும் நோக்கமாகவே இவை எல்லாம் தோன்றுகிறது. இவையெல்லாம் பிரதமர் காங்கிரஸ் தலைமையின் ஆசியுடனேயே நடந்தேறுகிறது. இவ்விஷயத்தில் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் எல்லாம் ஊழல் சங்கமங்கள். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்