முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் நிதியுதவி உத்தரகாண்ட் முதல்வரிடம் வழங்கப்பட்டது

சனிக்கிழமை, 29 ஜூன் 2013      அரசியல்
Image Unavailable

 

டேராடூன்,ஜூன்.30 - உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவித்த ரூ.5 கோடி நேற்று அந்த மாநில முதல்வர் விஜய் பகுகுணாவிடம் நேரடியாக வழங்கப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தில் வரலாறு காணாத அளவுக்கு இயற்கை பேரழி ஏற்பட்டுள்ளது. இதில் ஆயிரம் பேர் பலியாகிவிட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கலையும் கவலையும் தெரிவித்துள்ளார். பேரழிவால் ஏற்பட்டுள்ள சேதத்தை புனர்மைக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளையும் செய்ய தயார் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும் நிவாரண உதவிக்காக ரூ. 5 கோடி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 கோடியை நேற்று உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுணாவை டேராடூனில் டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன் நேரில் சந்தித்து வழங்கினார். இதற்கிடையில் உத்தரகாண்ட் வெள்ளபெருக்கில் சிக்கிய மேலும் 20-க்கும் மேற்பட்ட தமிழர்கள் மீட்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago