முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

14 தமிழக பக்தர்களை மீட்க அரசின் மூவர் குழு விரைந்தது

திங்கட்கிழமை, 1 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.2 - தற்போது 14 தமிழக பக்தர்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளது.  அவர்களை மீட்டு, முதலில் டெல்லி கொண்டு வந்தபின், தமிழகத்திற்கு அனுப்ப ஜக்கையன் தலைமையிலான குழு டோராடூனுக்கு விரைந்தது. உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பேரழிவில் சிக்கி சுமார் 15 ஆயிரம் பேர் பலியானார்கள். சுமார் 3 ஆயிரம் பேரை காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய புனித தலங்களுக்கு யாத்திரை சென்ற வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களாவார்கள்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 520 பக்தர்கள் கேதர்நாத்துக்கு சென்றிருந்தபோது பேரழிவில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க முதல்வர்வின் ஜெயலலிதா உத்தரவின் பேரில் சென்னை  போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது.

மேலும் தமிழ்நாட்டில் இருந்து டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன், வருவாய்த்துறைச் செயலாளர் ககன்தீப் சிங்பேடி, வருவாய் ஆணையர் டி.எஸ்.ஸ்ரீதர் ஆகியோர் டெல்லி மற்றும் டோராடூனுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்கள் ஒருங்கிணைந்து டேராடூனில் 8 நாட்கள் முகாமிட்டு தமிழக பக்தர்களை மீட்டனர். இதுவரை 503 தமிழக பக்தர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களை முதலில் அவர்கள் டெல்லி அழைத்து வந்தனர். பிறகு அவர்கள் விமானம், ரெயில் மூலம் தமிழ்நாட்டுக்கு வந்தனர். விமானம் மூலமாக 413 பேரும், ரெயில் மூலம் 90 பேரும் தமிழகம் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்