முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை - 15 விமான நிலையங்கள் தனியார் மயமாகிறது

வியாழக்கிழமை, 4 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை. 4 - சென்னை உள்பட 15 விமான நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் உள்பட 15 முக்கிய விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுபற்றி மத்திய விமான போக்குவரத்துதுறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.தற்போது டெல்லி, மும்பை விமான நிலையங்கள் பரீட்சார்த்த முறையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இங்கு விமான இயக்கம், கட்டிடப் பணிகள், நவீன மயமாக்கல், நிர்வாகம், வளர்ச்சி போன்றவற்றை தனியார் துறை நிர்வகித்து வருகிறது. இதில் சில குறைபாடுகள் இருந்தாலும் நாட்டில் உள்ள 15 விமான நிலையங்களை அடுத்த கட்டமாக தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை, கொல்கத்தா, ஆமதாபாத், ஜெய்ப்புர்ை, லக்னோ, கவுகாத்ரி ஆகிய 6 சர்வதேச விமான நிலையங்களும் அடங்கும்.

அங்கு தற்போது விமான போக்குவரத்து ஆணையம் நிர்வாக பணிகளை மேற் கொண்டு வருகிறது. அதன் கீழ் ஊழியர்கள் பணி புரிகிறார்கள். தனியார் மயமாகும் போது ஊழியர்கள் அனைவரும் தொடர்ந்து தனியார் நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள் என்று விமான போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது சம்பந்தமாக மத்திய திட்ட கமிஷன், நிதி, சட்டம் மற்றும் விமான போக்கு வரத்துதுறை அமைச்சகங்கள் இடையேயான ஆலோசனை நடந்து வருகிறது.

இந்த அமைச்சகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டு மத்திய அரசின் முடிவு பற்றி ஆலோசித்து வருகிறார்கள். ஆனால் இந்த  முடிவை விமான போக்குவரத்துத்துறை ஊழியர்கள் கடுமையாக எதிப்பர் என்று ஊழியர் சங்கங்களின் சார்பாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago