முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சியம்மன் கோயிலில் போலீசார் வெடிகுண்டு சோதனை

திங்கட்கிழமை, 8 ஜூலை 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை, ஜூலை 9  - மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலில் நேற்று அதிகாலை போலீசார் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். க்பீகார் மாநிலம் புத்தகயாவில் உள்ள புத்தர் கோவிலில் சம்பவதன்று  அடுத்தடுத்து 9 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 5 பேர் காயமடைந்தனர்.  இதையடுத்து நாடு முழுவதும் உள்ள  வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்த பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்கனவே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்கள் வெடிகுண்டு சோதனைக்கு பின்னரே கோவியிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

 புத்தர் கோவிலில் நடந்த வெடிகுண்டு சம்பத்தை தொடர்ந்து மீனாட்சியம்மன் கோவிலில் மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.புலனாய்வு பிரிவு உதவி கமிஷனர் மாரிமுத்து தலைமையில், நுண்ணறிவுப் பிரிவு, வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு மீனாட்சியம்மன் கோவில் போலீசார் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கொண்ட ஒரு சிறப்பு படை அமைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 4.30 மணியளவில் கோயில் திறந்தவுடன் அனைத்து பிரகாரங்களிலும் வெடிகுண்டு சோதனை நடந்தது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரிடமும் மெட்டல் டிடெக்டர் சோதனை நடந்தது. பக்தர்கள் கொண்டு வந்த பூஜை பொருட்கள் உட்பட அனைத்தும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது. மேலும் கோவிலை சுற்றி வாக்கிங் சென்றவர்களையும் போலீசார் நிறுத்தி அவர்கள் யார், எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்ற விசாரனைக்கு பின்னரே அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago