முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடனை கொல்ல பாக்.குடன் அமெரிக்கா ரகசிய ஒப்பந்தம்

செவ்வாய்க்கிழமை, 10 மே 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,மே.11 - பின்லேடனை கொல்ல 10 ஆண்டுகளுக்கு முன்பே பாகிஸ்தானுடன் அமெரிக்கா ரகசிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. பின்லேடனை கொன்றது தங்களுக்கு தெரியாது. முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் அமெரிக்க உளவுத் துறை பின்லேடனை சுட்டுக் கொன்றது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆனால் பின்லேடனை உயிருடனோ, அல்லது பிணமாகவோ பிடிக்க பாகிஸ்தானுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா ரகசிய ஒப்பந்தம் செய்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 2001 ம் ஆண்டே அமெரிக்கா மீதான தாக்குதலை தொடர்ந்து ஆப்கனில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க ராணுவம் வேட்டையாட தொடங்கியது. அப்போது டோராபோரா மலை பகுதியில் பதுங்கியிருந்த பின்லேடன் அங்கிருந்து தப்பி பாகிஸ்தானுக்குள் புகுந்து விட்டார். இதை தொடர்ந்து அமெரிக்காவின் பார்வை பாகிஸ்தான் மீது விழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முசாரப்புடன் ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்தார். அதன்படி பின்லேடனை உயிருடனோ, பிணமாகவோ தன்னிச்சையாக பிடிக்க அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் அரசு அதிகாரம் வழங்கியது. 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் அமெரிக்கா தற்போது தன்னிச்சையாக பின்லேடனை சுட்டுக் கொன்றிருப்பதாக பாகிஸ்தானின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இத்தகவலை லண்டனில் இருந்து வெளியாகும் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago