முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரணாசியில் காங்கிரஸ் மாநாடு ராகுல்காந்தி தொடங்கி வைக்கிறார்

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      இந்தியா
Image Unavailable

லக்னோ,மே.- 18 - உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் 2 நாள் காங்கிரஸ் மாநில மாநாட்டை கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ராகுல் காந்தி இன்று தொடங்கிவைக்கிறார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தம் பணியில் அதன் தலைவர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக உத்திரப்பிரதேச மாநில காங்கிரஸ் இரண்டு நாள் மாநாடு இன்று வாரணாசியில் உள்ள நடேசரில் ஆரம்பமாகிறது. மாநாட்டை சோனியா காந்தி மகனும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான ராகுல் காந்தி தொடங்கி வைக்கிறார் என்று கட்சியின் செய்தி தொடர்பாளர் சுபோத் ஸ்ரீவஸ்த்வா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். மாநாட்டின் இரண்டாவது நாளன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உரையாற்றுகிறார். மாநாட்டின் இறுதியாக பேரணி நடக்கிறது. இந்த பேரணியிலும் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் மற்றும் தலைவர்கள் கலந்துகொண்டு பேசுகிறார்கள். மாநாடு தொடங்குவதற்கு முன்பு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநில நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் ரீடா பகுகுணா ஜோஷி தலைமை தாங்குகிறார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony