முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியா தொழிற் சாலையில் 19 கர்ப்பிணிகள் மீட்பு

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

லாகோஸ், டிச.22 - நைஜீரியா குழந்தைகளை விற்பனை செய்வதற்காகவே செயல்பட்டு வந்த குழந்தை தொழிற்சாலையிலிருந்து 19 கர்ப்பிணிகள் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நையீரியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான ஏழ்மை காரணமாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இங்கு போதை பொருள் கடத்தல் சம்பவங்களுக்கு அடுத்தபடியாக ஆள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இங்கு குழந்தை விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது. 

இதற்காக ஏராளமான பெண்களை கூலிக்கு அமர்த்தி அவர்களை கர்ப்பிணியாக்கி ஒரே இடத்தில் தங்க வைத்து குழந்தைகளை பெற வைக்கின்றனர். இதுபோல் குழந்தைகளை உற்பத்தி செய்யும் குழந்தைகள் தொழிற்சாலை குற்றங்கள் அங்கு சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இதை தடுக்க போலீஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அடிக்கடி சோதனை நடத்தி குழந்தை வியாபாரத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். 

நைஜீரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள அபியா மாகாணத்தில் உபும் கையா என்ற இடத்தில் கர்ப்பிணி பெண்களை அடைத்து வைத்திருப்பதாக போலீஸாரு க்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி போலீஸ் அதிகாரி ஜியோப்ரா கூறுகையில், அங்கு திருமணம் ஆகாத பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரையிலான 19 கர்ப்பிணிகள் அசைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் மீட்கப்பட்டனர் என்றார்.                                 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago