முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை ஜெட் விமானத்தில் தீடீர் புகை 140 பயணிகள் உயிர்தப்பினர்

சனிக்கிழமை, 28 மே 2011      இந்தியா
Image Unavailable

மும்பை,மே.- 28 -  மும்பையில் இருந்து நேற்றுக்காலையில் புறப்பட்ட பயணிகள் ஜெட் விமானத்தில் இருந்து புகை கிளம்பியதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மும்பை சர்வதேச விமான நிலையித்தில் இருந்து நேற்றுக்காலை சரியாக 5.30 மணிக்கு 140 பயணிகளுடன் ஒரு ஜெட் விமானம் ஐதராபாத்திற்கு புறப்பட்டு வந்தது. விமானமானது வானத்தில் பறந்து வந்துகொண்டியிருந்தபோது விமானத்தின் சரக்கு பெட்டக பகுதியில் இருந்து புகை கிளம்பி வெளியை வந்தது. இதை கவனித்த விஞ்ஞானி உடனடியாக மும்பை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். மேலும் விமானத்தில் தீயணைப்பு கருவியை இயக்கி தீயை அணைக்க நடவடிக்கை எடுத்ததோடு விமானத்தை  திருப்பி மீண்டும் மும்மை விமான நிலையத்திற்கு திரும்பிக்கொண்டிருப்பதாகவும் கூறினார். அதனையடுத்து விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. விமானம் புறப்பட்ட சுமார் 35 நிமிடத்தில் மீண்டும் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது. பயணிகள் 140 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். விமானம் தரையிறக்கியதும் அதை தனியாக நிறுத்தி அதை வெடிகுண்டு நிபுணர்கள், தீயணைப்பு துறையை சேர்ந்த அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள் ஆகியோர் விமானத்திற்குள் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்