முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

\ஹெலிகாப்டரில் கோளாறு ப. சிதம்பரம் உயிர் தப்பினார்

வியாழக்கிழமை, 23 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்,ஜூன்.- 23 - மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பயணம் செய்த ஹெலிகாப்டரில் 2 என்ஜின்களில் ஒன்றில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் பயணம் செய்த ப. சிதம்பரம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.  மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் என்ற இடத்தில் இருந்து குரேஷ் என்ற இடத்திற்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். ஆனால் அவர் பயணம் செய்த எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த ஹெலிகாப்டரில் 2 என்ஜின்களில் ஒன்றில் திடீர் கோளாறு ஏற்பட்டது. ஹெலிகாப்டர் புறப்பட்ட 20 நிமிடத்திலேயே என்ஜினில் கோளாறு ஏற்பட்டதை நல்லவேளையாக பைலட் கண்டுபிடித்தார்.
2 என்ஜின்களில் ஒன்று கோளாறு ஏற்பட்டதால் இனிமேல் அந்த ஹெலிகாப்டரில் பயணம் எல்லையை நோக்கி பயணம் செய்வது நல்லதல்ல என்று பைலட் எடுத்துரைத்தாராம். அவரது யோசனை ஏற்கப்பட்டு அந்த ஹெலிகாப்டர் நேரு ஹெலிபேடு தளத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் உள்துறை அமைச்சர் சிதம்பரம், எல்லைப் பாதுகாப்பு படை தலைவர் மற்றும் உயரதிகாரிகள் ஆகியோர் பயணம் செய்தார்கள்.
பைலட்டின் அறிவுரையை ஏற்று இந்த ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டு மற்றொரு ஹெலிகாப்டரில் சிதம்பரமும் மற்றும் அதிகாரிகளும் அடுத்த 30 நிமிடத்தில் புறப்பட்டு சென்றனர். இது பற்றி கூறிய ஒரு அதிகாரி, இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று தெரிவித்தார். எது எப்படியோ, பிரச்சினையில் இருந்து ஹெலிகாப்டரும் தப்பித்தது, ப. சிதம்பரமும் தப்பினார். சில மாதங்களுக்கு முன் அருணாசல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டூ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பலியானார். 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர். இதே போல் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago