முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில மோசடி சிக்கலில் எடியூரப்பா முகம் சுளிக்கும் பா.ஜ.க

புதன்கிழமை, 6 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

பெங்களூர், ஜூலை. - 6 - கர்நாடக மாநிலம் மைசூரில் வீட்டுமனைகளை முதல்வர் எடியூரப்பா தனது உறவினர்கள் 10 பேருக்கு அடிமட்ட விலைக்கு கொடுத்தது தெரியவந்துள்ளது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட வண்ணம் உள்ள நிலையில் மைசூரில் விலையுயர்ந்த நிலங்களை தனது உறவினர்களுக்கு அடிமட்ட விலைக்கு கொடுத்துள்ளார். கடந்த 2009-10 ம் ஆண்டில் மைசூர் விஜயநகர்பகுதியில் உள்ள 2 ஆயிரத்து 400 சதுர அடி வீட்டடிமனைகள் குறைந்தது ரூ.20 லட்சத்திற்கு விற்பனையாகும் நிலங்களை தனது சகோதரி உள்ளிட்ட 10 உறவினர்களுக்கு நிலங்களை ரூ.85 ஆயிரம் முதல் 4.5 லட்சம் வரை விற்றுள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக கர்நாடக அரசு பெங்களூரில் யாருக்கும் நிலம் ஒதுக்கப்படாததால் மைசூரி நிலங்களுக்கு கிராக்கி அதகம் உள்ளது.
மைசூர் அரசு ஒதுக்கும் என எதிர்பார்த்து 1லட்சத்து 2 ம் பேர் காத்துக்கிடந்த நிலையில் எடியூரப்பா தனது உறவினர் மற்றும் நண்பர்கலுக்கு குறைந்த விலையில் கொடுத்துள்ளது எங்கே வெளியே வரப்போகிறது என்பது அவரது எண்ணம் என எடியூரப்பாவின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் வீட்டு மனைகள் ஒதுக்கியது தொடர்பாக எடியூரப்பா ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து எடியூரப்பா கூறியதாவது, எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 10 பேருக்கு  நிலம் ஒதுக்கியதாக குற்றம் சாட்டபட்டதில், நான் கருணையின் அடிப்படையில் அடிப்படையில் எனது உறவினர்கள் 4 பேருக்கு மட்டும் தான் நிலத்தை ஒதுக்கினேன் என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன். மீதமுள்ள 6 பேருக்கும் எனக்கும்எந்தவித சம்பந்தமும் இல்லை . எந்த முறைகேடும் செய்யவில்லை என்றார். இந்த சர்ச்சையால் மாநில பா.ஜ.க வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியில் வன நிலத்தை அபகரித்த அதிபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை முதல்வர் அலுவலகம் தடுத்தது தொடர்பாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பொது நில மீட்பு மற்றும் பாதுகாப்பு பணி குழுவின் தலைவர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், சிக்மகளூர் காட்டுப்பகுதியில் நிலத்தை சில முக்கிய புள்ளிகள் ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என முதல்வர் அலுவலகத்தில் இருந்து வன அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் வனத்துறையினர் எப்படி நடவடிக்கை மேற்கொள்ளமுடியும். இது தவிர பெங்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் நில அபகரிப்பு தொடர்பாகவும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்