லெனின் கருப்பன் மீதான விசாரணைக்கு தடை

Image Unavailable

பெங்களூர்,ஆக.7 - நித்யானந்தாவின் முன்னாள் ஓட்டுனரும், சீடருமான லெனின் கருப்பன் மீது நடிகை ரஞ்சிதா தொடர்ந்த வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெண்களை அவமானப்படுத்தும் வகையில் காட்சிகளை புனைந்து தொலைக்காட்சியில் செய்திகளை பரப்பியதாகவும், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் லெனின் கருப்பன் மீது ராமநகரம் மாவட்ட நீதிமன்றத்தில் ரஞ்சிதா மனு தாக்கல் செய்திருந்தார். அதையடுத்து லெனின் கருப்பனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. அந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் லெனின் கருப்பன் முறையிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ