முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உல்பா தீவிரவாதிகளுடன் 2-வது சுற்றுப் பேச்சுவார்த்தை

ஞாயிற்றுக்கிழமை, 4 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

கவுகாத்தி, செப்.- 4 - மத்திய அரசு பிரதிநிதிகள்-உல்பா தீவிரவாதிகள் பிரதிநிதிகள் இடையே நேற்று அசாம் மாநிலத்தில் இரண்டாவது சுற்றுப்பேச்சுவார்த்தை நடைபெற்றது. வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அசாம் மாநிலத்தில் உல்பா தீவிரவாத அமைப்பும், நாகலாந்தில் நாகா தீவிரவாத அமைப்பும் செயல்பட்டு வருகின்றன. மேலும் மிசோரம், அருணாசலப்பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் அடிக்கடி நாசவேலையில் ஈடுபட்டு வருவதால் பலத்த சேதம் ஏற்படுவதோடு உள்நாட்டு பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது. அதோடு மட்டுமல்லாது பீகார், மேற்குவங்காளம், ஒரிசா, ஆந்திரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வரும் நக்சலைட் மற்றும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் வடகிழக்கு மாநில தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்பு இருந்து வருகிறது. அதனால் இவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதனையொட்டி உல்பா தீவிரவாதிகளுடன் மத்திய அரசு முதல் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. அதில் ஏற்பட்ட முன்னேற்றத்தை அடுத்து இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. அப்போது போர்நிறுத்தம் குறித்து விரிவான முறையில் பேசப்பட்டதாக தெரிகிறது. இதற்கிடையில் மேற்குவங்காளத்தில் இருந்து மாவோ தீவிரவாதிகள் அசாம் மாநிலத்திற்குள் நுழையாமல் இருக்க இரண்டு மாநிலங்களுக்கிடையேயான எல்லைப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony