எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.11 - தமிழகம் முழுவதிலும் உள்ள 42 சுகாதார மாவட்டங்களில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தாய்-சேய் நல மையம் அமைக்கப்படும், 20 புதிய ஆரம்ப சுகாதார நிலையம் துவக்கப்படும், மருத்துவத்துறையில் காலியாக உள்ள 15,600 காலிபணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார். தமிழக சட்டசபையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைவிதி எண்.110ன் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் அவர் கூறியதாவது:
``நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'' என்ற பழமொழியை கருத்தில் கொண்டு, இயன்ற வரை நோய் இல்லா வாழ்வை மக்கள் பெறுவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்னோடித் திட்டங்களை எனது அரசு செயல்படுத்தி வருகிறது என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். நோயை முற்றிலுமாக தவிர்ப்பது என்பது இயலாத ஒன்று ஆகும். எனவே தான், நோய் ஏற்படும் போது, அந்த நோயை நீnullக்குவதற்கான மருத்துவ வசதிகளை மக்களுக்கு அளித்து, அனைவருக்கும் நோயற்ற நல்வாழ்வு என்ற உயரிய இலக்குடன், சுகாதார சேவைகளை அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், மக்கள் நல்வாழ்வுத் துறையால் செயல்படுத்தப்பட இருக்கும் சில புதிய திட்டங்கள் குறித்து இந்த மாமன்றத்தில் நான் தற்போது எடுத்துரைக்க விழைகிறேன்.
தற்போது மாநிலத்தில் உள்ள 1,589 ஆரம்ப சுகாதார நிலையங்களில், 1,539 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் சுகாதார சேவை அளிக்கக் கூடிய வகையில் செயல்பட்டு வருகின்றன. எஞ்சியுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில், விரைவில் மாற்றி அமைக்கப்படும். தரம் உயர்த்தப்பட்ட 283 ஆரம்ப சுகாதார நிலையங்களில், முன்பே நிர்ணயம் செய்யப்பட்ட சிசேரியன் அறுவை சிகிச்சை, அதாவது, எலெக்டிவ் சிசேரியன் செய்வதற்கான வசதிகள் உள்ளன. திடீரென்று, அவசரமாக சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யும் வசதி கிராமப்புறங்களில் இல்லை. இதனை nullநீக்கும் வகையில், முதற்கட்டமாக 42 தாய்சேய் நல மையங்கள் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவசரகால சிசேரியன் அறுவை சிகிச்சை மற்றும் ரத்தம் செலுத்தும் வசதியுடன் 24 மணி நேரமும் இந்த தாய்சேய் நல மையங்கள் செயல்படும். சுகாதார மாவட்டம் ஒவ்வொன்றுக்கும் ஒரு மையம் வீதம் இந்த 42 மையங்கள் அமைக்கப்படும்.
மேலும், தொலை தூரத்தில், எளிதில் சென்றடைய முடியாத நிலையில் உள்ள 31 துணை சுகாதார மையங்கள், முதல்நிலை தாய்சேய் நல மையங்களாக தரம் உயர்த்தப்படும். முழு நேர
சேவை அளிக்கும் வகையில், இந்த மையங்கள் ஒவ்வொன்றிலும், 3 செவிலியர்கள் பணி அமர்த்தப்படுவர். இவ்வாறு, 42 தாய்சேய் நல மையங்களை அமைப்பதற்கும், 31 துணை சுகாதார மையங்களை தரம் உயர்த்துவதற்கும், 19 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.
கிராமப்புற பெண்கள் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை கொண்ட எனது அரசு, கிராமப்புற பெண்களின் நலனுக்காக புதிய திட்டம் ஒன்றைச் செயல்படுத்த முடிவெடுத்துள்ளது. கிராமப்புற பெண்கள் இடையே ஆரோக்கியமான நடைமுறைகளை கடைபிடிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வகையில் பரிசோதனை மேற்கொள்ளவும், இந்தத் திட்டம் வழி வகுக்கும். 2 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
மலைப் பகுதிகளில் 20,000 மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் எனவும், சமவெளிப் பகுதிகளில் 30,000 மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் எனவும்
மத்திய அரசால் வரன்முறை செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில், இந்த ஆண்டு, 12 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் 20 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்படும். மேலும், மருத்துவ வசதி குறைவாக உள்ள 38 வட்டாரங்களில் உள்ள 38 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 30 படுக்கை வசதி, ஸ்கேன் வசதி மற்றும் அறுவை அரங்குகள்
ஆகிய வசதிகளுடன், 39 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
இன்றைய நவீன யுகத்தில் அனைத்து துறைகளிலும் கணினியின் பயன்பாடு நீnullக்கமற நிறைந்துள்ளது. மருத்துவத் துறையிலும் கணினி பயன்பாடு மிகவும் இன்றியமையாதது ஆகும். நோயாளிகள் பல்வேறு துறைகளைச் சார்ந்த மருத்துவ வல்லுநர்களுடன் கணினி மூலம் நேரடியாகத் தொடர்பு கொண்டு, நோய்கள் குறித்த சந்தேகங்களை தீர்த்துக் கொண்டு சிகிச்சை பெறும் வகையில், கணினி வழி உரையாடும் வசதியை நான் எனது முந்தைய ஆட்சி காலத்திலேயே ஏற்படுத்தினேன். தொலைதூர கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு உயர் மருத்துவ ஆலோசனை கிடைக்கும் வகையில், 5 கோடி ரூபாய் செலவில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெலிமெடிசின் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
தமிழக மக்கள் அனைவரும் நோயற்ற நல்வாழ்வு வாழ நல்ல பல திட்டங்களை நிறைவேற்றி வரும் அதே நேரத்தில், இந்தத் திட்டங்களின் பயன்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும் எனில், துணை சுகாதார மையங்கள் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை தேவையான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் ஓய்வு பெறுவதாலோ அல்லது பணியை விட்டு நீnullங்குவதாலோ ஏற்படும் காலி இடங்கள் மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்படும் பணி இடங்கள் ஆகியவை உடனுக்குடன் நிரப்பப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். மக்கள் நல்வாழ்வுத் துறையில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், மருத்துவமனை அடிப்படைப் பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள்
போன்ற பல்வேறு நிலைகளில் சுமார் 91,600 பணியிடங்கள் உள்ளன. இவற்றில், தற்போது 15,600க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இத்தகைய காலிப் பணியிடங்களுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், ஏற்படப் போகும் காலிப் பணியிடங்களை முன் கூட்டியே கணக்கிட்டு, பணியாளர்களை விரைந்து தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறை இல்லாதது தான் அதற்கு முக்கியமான காரணம் ஆகும்.
இந்த குறைபாட்டை நீnullக்கும் வகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக, மருத்துவத் துறை பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கு என்று, மருத்துவத் துறை பணியாளர் தேர்வு வாரியம், அதாவது, மெடிகல் சர்வீசஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையில் இந்திய ஆட்சிப் பணியில் உள்ள கூடுதல் செயலாளர் இந்தத் தேர்வு வாரியத்தின் தலைவராக இருப்பார். மருத்துவத் துறை இணை இயக்குநர் நிலையில் உள்ள ஒரு அலுவலர் உறுப்பினராகவும்; மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ள ஒரு அலுவலர் உறுப்பினர்செயலாளராகவும் இருப்பர். வாரியத்திற்கு தேவையான இதரப் பணியாளர்களும் நியமிக்கப்படுவர். தேவைப்படும் பணியாளர்களை தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி இந்த மருத்துவத் துறை பணியாளர் வாரியம் தேர்வு செய்யும். தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவர்களையும் இந்த வாரியம் தேர்வு செய்யும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய விதிமுறைகளில் தக்க திருத்தம் மேற்கொண்ட பின், மருத்துவர்களுக்கான நிரந்தரப் பணியிடங்களும், இந்த தேர்வு வாரியத்தின் மூலமே நிரப்பப்படும்.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை தேர்வு செய்ய இது போன்ற தனி வாரியம் அமைக்கப்படுவதால், துணை சுகாதார மையங்கள் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை உள்ள மருத்துவமனைகளில் ஏற்படும் காலியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்படும் என்பதை மன நிறைவுடன் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –06-02-2026
06 Feb 2026 -
நெல்லை வடக்குபச்சையாறு அணையில் இன்று முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவு
06 Feb 2026நெல்லை, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், வடக்குபச்சையாறு அணையில் இருந்து இன்று முதல் பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழக அரசின் நீர்வ
-
பாக்.கில் 24 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
06 Feb 2026லூகூர், பாகிஸ்தானின் வடமேற்கு கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் இரண்டு தனித்தனி உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் 24 பயங்கரவாதிகள் சுட்
-
தருமபுரி: வாணியாறு அணையில் 55 நாள்களுக்கு நீர் திறக்க உத்தரவு
06 Feb 2026தருமபுரி, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழக அரசின் நீர்வளத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூற
-
நேபாளத்தில் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
06 Feb 2026காத்மாண்டு, நேபாளத்தில் திருமணத்திற்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
06 Feb 2026சென்னை, தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,000க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான்: மசூதியில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதல் 31 பேர் பலி - பலர் படுகாயம்
06 Feb 2026இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பலியானார்கள் மேலும் இதில் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில்
-
மியான்மரில் நிலநடுக்கம்
06 Feb 2026நைப்பியிடா, மியான்மரில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.9 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது
06 Feb 2026சென்னை, 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக மின்னஞ்சலில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க அறிவுறுத்தல்
06 Feb 2026சென்னை, த.வெ.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்கான இணையதளம் முடங்கியதால், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க த.வெ.க.
-
'புராஜெக்ட் வால்ட்' திட்டம் மூலம் பாகிஸ்தானில் 13 பில்லியன் டாலர் முதலீடு செய்ய அமெரிக்கா முடிவு
06 Feb 2026நியூயார்க், 'புராஜெக்ட் வால்ட்' என்ற திட்டத்தின் மூலம், பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள தங்கம் மற்றும் செம்புச் சுரங்கங்களை மேம்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
-
சிங்கப்பூரில் ரூ. 1.9 கோடி மோசடி: இந்திய வம்சாவளிக்கு சிறை
06 Feb 2026சிங்கப்பூர், சிங்கப்பூரில் இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.
-
பீகார் தேர்தல் முடிவை எதிர்த்த பிரசாந்த் கிஷோர் கட்சி மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
06 Feb 2026பாட்னா, பீகார் தேர்தல் முடிவை எதிர்த்து தாக்கல் செய்த பிரசாந்த் கிஷோர் கட்சியின் மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து தள்ளுபடி செய்தது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
06 Feb 2026- நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவிலில் லட்சதீபம் உற்சவாரம்பம்.
-
இன்றைய நாள் எப்படி?
06 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
06 Feb 2026


