முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி பிரம்மோற்சவ விழா வருமானம் ரூ.14 கோடி

ஞாயிற்றுக்கிழமை, 9 அக்டோபர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

நகரி, அக்.9 - திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 28 ம் தேதி முதல் 9 நாட்கள் நடைபெற்றது. விழா நாட்களில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மொத்தம் 19 லட்சத்து 63 ஆயிரத்து 637 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட பக்தர்கள் கூட்டம் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. உண்டியல் வருமானமாக கோவிலுக்கு ரூ. 13.27 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட இநத ஆண்டு 27 சதவீதம் வருமானம் அதிகரித்துள்ளது. 

திருப்பதி கோவில் பிரசாதமாக லட்டு ரூ. 19. 63 கோடி அளவுக்கு விற்பனையாகி உள்ளது. வாடகை அறைகள் மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 1.06 கோடி வருமானம் கிடைத்துள்ளது. பிரம்மோற்சவ நாட்களில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 312 பேர் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர். 13 லட்சத்து 82 ஆயிரத்து 368 பக்தர்கள் அன்னதான கூடத்தில் சாப்பிட்டனர். ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் மூலம் வந்து சென்ற பக்தர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 7 லட்சத்து 78 ஆயிரத்து 30 பேர். ஆனால் இந்த ஆண்டு 10 லட்சத்து 63 ஆயிரத்து 133 பக்தர்கள் வந்து சென்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 2 லட்சத்து 85 ஆயிரத்து 102 பக்தர்கள் அதிகமாகும். 

கடந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவிற்காக பக்தர்கள் 22 டன் பூக்கள் இலவசமாக வழங்கி இருந்தனர். இந்த ஆண்டு 32 டன் பூக்கள் இலவசமாக வழங்கியுள்ளனர். இதன் மதிப்பு ரூ. 65 லட்சமாகும். இவ்வாறு எல்லா வகையிலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவில் அதிகளவில் வருவாயும் பக்தர்கள் வருகையும் அதிகரித்து உள்ளது. மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தான சேர்மன் கனுமொடிபாபிராஜூ தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago