முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையை உலக தரம் வாய்ந்த நகராக மாற்ற வாக்களியுங்கள்

ஞாயிற்றுக்கிழமை, 9 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, அக்.9 - சென்னையை உலக தரம் வாய்ந்த நகராக மாற்ற அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று மாநகர மேயர் வேட்பாளர் சைதை துரைசாமி வாக்கு கேட்டார். அவருடன் அமைச்சர் கோகுல இந்திரா, வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் சென்றனர். சென்னை மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் சைதை துரைசாமி புரசைவாக்கம் பாதாள அம்மன் கோவில் வாசலில் இருந்து இன்று வாக்கு சேகரித்தார். வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார். அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.வினர் இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினர். மில்லர்ஸ் சாலை, பால்பர் சாலை, புதிய ஆவடி சாலை, டி.பி.சத்திரம், சூளைமேடு, அரும்பாக்கம், அண்ணா நகர் போன்ற பகுதிகளில் ஓட்டு சேகரித்தார். வழி நெடுக பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். டி.பி.சத்திரத்தில் சைதை துரைசாமி பேசியதாவது:​ மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. வினருக்கு பொதுமக்கள் நல்ல பாடம் புகட்ட உள்ளனர். வன்முறையான, நேர்மையற்ற, மக்கள் நலப்பணிகளில் கவனம் செலுத்தாத தி.மு.க. சந்திக்க போகும் மிகப் பெரிய தோல்வி தேர்தல் இது என்பதை நான் பிரசாரம் செய்ய போகும் இடங்களில் பொதுமக்களை தெரிவிக்கும் புகார்களை நேரடியாக கேட்டு அறிகிறேன். மேம்படுத்தப்பட்ட சென்னையின் புதிய பழைய பகுதிகளுக்கு பிரசாரத்திற்கு செல்லும் போது பொது மக்கள் கடந்த தி.மு.க. அரசை பற்றியும், தி.மு.க. மாநகராட்சி பற்றியும் அடுக்கு அடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர். பல பகுதிகளில் அடிப்படையான வசதிகள் கூட செய்து கொடுக்காத காரணத்தினால் பல பகுதிகளுக்கு தி.மு.க.வினர் மேயர் வேட்பாளரும் பிரசாரத்திற்கு செல்லவில்லை. தோல்வி பயத்தில் தி.மு.க.வினரும், முன்னாள் மேயரும், கவுன்சிலர்களும் துவண்டு கிடக்கிறார்கள். வீராணம் திட்டத்தை செயல்படுத்தி சென்னை மக்களின் குடிnullர் பிரச்சினையை தீர்த்தவர் அம்மா. சென்னையின் குடிநீnullர் தாகத்தை தீர்த்து வைத்த ஆட்சி அம்மா ஆட்சியாகும். சென்னைக்கு புதிய வீராணம் திட்டத்தை அறிமுகம் செய்து புதிய பரிணாமம் செய்தவர் அம்மா என்பதை அனைத்து தரப்பு மக்களும் நன்கு அறிவார்கள். நடைபெற உள்ள சென்னை மாநகராட்சி தேர்தலில் மேயர் வேட்பாளராகிய எனக்கும், அ.தி.மு.க. கவுன்சிலர் வேட்பாளர்களுக்கும் வாக்களித்து வெற்றி பெற செய்தால் சுத்தமான, சுகாதாரமான, நேர்மையாக அனைத்து தரப்பு மக்களும் பயன்படும் வகையில் மாநகராட்சி நடைபெறும். தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக உயர்த்தி வரும் முதல்​அமைச்சர் சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகராக உருவாக்கும் திட்டத்தில் உள்ளார். அதனை நிறைவேற்ற அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony