எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய வருமான வரிசட்டம் நடைமுறைக்கு வரும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி தாக்கல் செய்யும்போது பொய் கணக்கு காட்டினாலோ, தவறான தரவுகள் வழங்கினாலோ 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
9வது முறையாக....
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதனிடையே, ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், 2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று காலை 11 மணிக்கு பாராளுமன்றத்தில் மத்திய பஜெட்டை தாக்கல் செய்தார். 2026 - 27-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் மத்திய பட்ஜெட்டை(2026-27) 9வது முறையாக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பொதுவாக ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றம் விடுமுறை தினமாகும். ஆனால் நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) பட்ஜெட் தாக்கல் என்பதால் பாராளுமன்றம் செயல்பட்டது. 27 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட்டுக்கு ஒப்புதல்...
இந்நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கலின்போது, இந்திய பொருளாதாரம் சீரான வேகத்தில் முன்னேறி வருவதாக கூறிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிறு காலை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மக்களவையில் தாக்கல் செய்து தெரிவித்ததாவது., வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய வருமான வரிசட்டம் நடைமுறைக்கு வரும். வெளிநாட்டு சுற்றுலாவுக்கன வரி பிடித்தம் 2 சதவீதமாகக் குறைக்கப்படும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும். வருமான வரிக் கணக்கு தாக்கல் எளிமையாகிறது.
தரவு மையங்களை...
வாகன விபத்துக்கான இழப்பீட்டுத் தொகைக்கு வரிச் சலுகை அறிவிக்கப்படும். வருமான வரி பிடித்தம் தொடர்பான விதிகளில் தளர்வு அறிவிக்கப்படும். மருத்துவக் கல்விக் கடனுக்கான வரி 5 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தரவு மையங்களை அமைக்க ஊக்குவிக்கப்படும். இந்தியாவில் தரவு மையங்களுக்கு வரும் 2047ஆம் ஆண்டு வரை முழு வரி விலக்கு அளிக்கப்படும். வரிச் சார்ந்த குற்றங்களுக்கான அதிகபட்ச தண்டனை 2 ஆண்டுகளாகக் குறைப்பு.
வரி தாக்கல் எளிய முறையில் ...
வருமான வரித் தாக்கல் தொடர்பான சிறு குற்றங்களுக்கு குற்றவியல் நடவடிக்கை இல்லை. வெளிநாடு வாழ் இந்தியர்கள் சொத்துக் கணக்கை காட்ட வாயப்பு அளித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.6 மாதங்களுக்குள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்வதற்கான புதிய திட்டம் அறிமுகம். சாதாரண குடிமக்கள் தாக்கல் செய்யும் வகையில் எளிய முறையில் வருமான வரிக் கணக்கு தாக்கல் முறை அமையும். தனிநபர்கள் வழக்கம் போல ஜூலை 31ஆம் தேதி வரை வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்படும். தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை.
மருத்துவ செலவுகளுக்காக..
திருத்தப்பட்ட புதிய வருமான வரி சட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய மார்ச் வரை கால நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.ஆர்.-1 மற்றும் ஐ.டி.ஆர்.-2 வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு ஜூலை 31-ம் தேதியும், தணிக்கை தேவைப்படாத வணிகங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு ஆகஸ்ட் 31-ம் தேதியும் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்திற்கான (TCS), 5% லிருந்து 2%ஆகக் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்களின் வரி குறைப்பு...
வருமான வரி தாக்கல் செய்யும்போது பொய் கணக்கு காட்டினாலோ, தவறான தரவுகள் வழங்கினாலோ 100% அபராதம் விதிக்கப்படும் எனவும் வருமான வரி தாக்கல் தொடர்பான சிறிய குற்றங்களுக்கு கிரிமினல் வழக்கு கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர டேடா சென்டர் டெவலப்பர் நிறுவனங்களுக்கு 2047ம் ஆண்டு வரை வரி விடுமுறை அளிக்கப்படும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்துக்களின் வரி குறைக்கப்பட்டுள்ளது. தனிநபர் பயன்பாட்டுக்கான இறக்குமதி பொருட்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.
7 அரிய நோய்களுக்கான...
புற்றுநோய் சிகிச்சைக்கான 17 மருந்துகளுக்கு சுங்க வரி முழுமையாக நீக்கம், 7 அரிய நோய்களுக்கான மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரி நீக்கம், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் மூலம் ஒரு நபருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைக்கான வட்டிக்கு இனி வருமான வரி கிடையாது. மேலும், இதற்காக டி.டி.எஸ். பிடிக்கப்படாது. வெளிநாட்டு இந்தியர்கள் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு இனி முதலீடு செய்யவும் அனுமதி.
ஆதிச்சநல்லூர் தொல்லியல்...
”தமிழ்நாட்டின் பொதிகை மலை, ஹிமாசல், உத்தரகண்ட், ஜம்முவில் மலையேற்றத்தை ஊக்குவிக்க திட்டம் கொண்டுவரப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளம், உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும். கலாசார செழுமையை விளக்கும் வகையில் கலாசார மையம் உருவாக்கப்படும். நாடு முழுவதும் 15 தொல்லியல் தளங்கள் சுற்றுலாத் தளமாக மேம்படுத்தப்படும். பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம் செயல்படுத்தப்படும்.
மாநிலங்களுக்கான வரி பகிர்வு...
"2027 நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, காலவரையறை நிர்ணயிக்கப்பட்ட பத்திரங்கள் மூலம் ரூ. 11.7 லட்சம் கோடி அரசு கடன் வாங்க உள்ளது. 16 ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான வரி பகிர்வில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 41% ஆகவே தொடரும். 2026 -27 ஆம் நிதியாண்டுக்கான மாநிலங்களுக்கான ரூ.1.4 லட்சம் கோடி நிதி விடுவிக்கப்படும். முன்னதாக, நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மருத்துவம் சார்ந்த படிப்புகள்...
15,000 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் வரைகலை (அனிமேஷன்) ஒளிக்காட்சிகள், விளையாட்டு மற்றும் சித்திரக்கலை (காமிக்ஸ்) படைப்பாற்றல் ஆய்வகங்கள் உருவாக்கப்படும். மாநிலத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் மாணவிகளுக்கு விடுதிகள் அமைக்கப்படும். மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான வரி 2 சதவீதமாக குறைப்பு. கால்நடை மற்றும் துணை கால்நடை மருத்துவக் கல்லூரிகள், பரிசோதனை ஆய்வகங்கள், இனப்பெருக்க வசதிகள் ஏற்படுத்தப்படும். ஆயுர்வேதத்திற்காக புதிதாக 3 அகில இந்திய நிறுவனங்கள் உருவாக்கப்படும். ஆயுஷ் மருந்தகங்கள் மற்றும் பரிசோதனைக் கூடங்கள் உயர் தரங்களுக்கு மேம்படுத்தப்படும்.
5 பல்கலைக்கழக நகரங்கள்...
ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம் மேம்படுத்தப்படும். தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் 5 பல்கலைக்கழக நகரங்களை உருவாக்குவதில் மாநிலங்களுக்கு ஆதரவு. சுயசார்பு இந்தியாவின் முக்கிய உந்துசக்தியாக சேவைத் துறையை மையமாகக் கொண்ட 'கல்வி முதல் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு' நிலைக்குழு அமைக்கப்படும். இந்தக் குழு, வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகளை மேம்படுத்துவதற்கான துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்.
செமிகண்டக்டர் 2.0 திட்டம்....
கருவிகள் மற்றும் கச்சா பொருள்கள் மற்றும் இந்திய அறிவுசார் சொத்துகளை உற்பத்தி செய்வதற்காக ஐஎஸ்எம் 1.0, ஐஎஸ்எம் 2.0 அடிப்படையிலான கட்டமைப்புகள் தொடங்கப்படும். செமிகண்டக்டர் 2.0 திட்ட வளர்ச்சிக்கு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நீடித்த சரக்கு போக்குவரத்துக்கான சூழல் அமைப்பிற்கு உத்வேகம் அளிக்கும் நடவடிக்கைகள் புதிய பிரத்யேக சரக்கு போக்குவரத்துக்கான வழித்தடம் உருவாக்கப்படும். 20 புதிய தேசிய நீர்வழிப்பாதைகள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ஏற்படுத்தப்படும்.பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் உருவாக்கப்படும்.
அதிவேக ரயில் வழித்தடங்கள்...
உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துக்கான கப்பல் பழுதுநீக்கும் கட்டமைப்பு வாரணாசி மற்றும் பாட்னாவில் அமைக்கப்படும். கடலோர சரக்குப் போக்குவரத்து ஊக்குவிப்புத்திட்டம் தொடங்கப்படுவதன் மூலம் உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து மற்றும் கடலோரக் கப்பல் போக்குவரத்துக்கான் பங்களிப்பு அதிகரிக்கும். மத்திய பட்ஜெட் 2026-27 இல், தென்னிந்தியாவின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் சென்னைக்கு இரண்டு புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை - பெங்களுரு, சென்னை - ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் தடம் அமைக்கப்படும். மும்பை - புணே, புணே- ஹைதராபாத், ஹைதராபாத் - பெங்களூரு, ஹைதராபாத் - சென்னை, சென்னை - பெங்களூரூ, பெங்களூரு - வாரணாசி, வாரணாசி - சிலிகுரி ஆகிய நகரங்களுக்கு இடையே 7 அதிவேக ரயில் தடங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் அறிவித்தார்.
புதிய வருமான வரி விதிப்பு முறை:
1) குறைந்தது ரூ. 4 லட்சம் வரை - வரி இல்லை.
2) ரூ.4 லட்சம் - ரூ.8 லட்சம் வரை - 5 சதவிகிதம் வரி.
3) ரூ.8 லட்சம் - ரூ.12 லட்சம் வரை - 10 சதவிகிதம் வரி.
4) ரூ.16 லட்சம் - ரூ.20 லட்சம் வரை - 20 சதவிகிதம் வரி.
5) ரூ.20 லட்சம் - ரூ.24 லட்சம் வரை - 25 சதவிகிதம் வரி
6) ரூ.24 லட்சத்துக்கு மேல் - 30 சதவிகிதம் வருமான வரி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் மார்ச் 9-ம் தேதி விவாதம்
12 Feb 2026புதுடெல்லி, மக்களவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9-ம் தேதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மக்களவை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
தங்கம் விலை குறைவு
12 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,520 குறைந்து ரூ. 1,16,800-க்கு விற்பனையானது.
-
டெல்லியில் புதிய பிரதமர் அலுவலம்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
12 Feb 2026டெல்லி, தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்தின் புதிய கட்டிடமான சேவா தீர்த் மற்றும் கர்த்தவ்ய பவன் 1 மற்றும் 2ஐ பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 13-ம் தேதி (இன்று) த
-
இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி மூன்று மடங்கு அதிகம்: முதல்வர்
12 Feb 2026சென்னை, இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின உற்பத்தி வளர்ச்சி 3 மடங்கு அதிகம் என்றும், . 5 ஆண்டுகளில் 12.37 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
-
வங்கக்கடல் பகுதியில் பிப்.15-ல் உருவாகிறது புதிய புயல் சின்னம்
12 Feb 2026சென்னை, வங்கக்கடல் பகுதியில் வருகிற 15-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பெரியளவில் பாதிப்பில்லை
12 Feb 2026சென்னை, மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நேற்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றன.
-
ரூ. 31,934 கோடி முதலீட்டில் முடிவுற்ற 52 திட்டப்பணிகள்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
12 Feb 2026சென்னை, தமிழகத்தில் புதிதாக 82,664 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் ரூ.31,934 கோடி முதலீட்டில்
-
கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
12 Feb 2026மானாமதுரை,இந்தியாவிலேயே முதன் முறையாக கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
-
2 நாட்கள் பயணமாக அமித்ஷா இன்று திருச்சி வருகை
12 Feb 2026சென்னை, தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இன்று (பிப்.13) திருச்சிக்கு வருகிறாா்.
-
ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிரான வழக்கு: ரூ. 10 லட்சம் செலுத்த தோனிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
12 Feb 2026சென்னை, ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிராக தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கில், ரூ.
-
சென்னையில் ரூ.96.04 கோடியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
12 Feb 2026சென்னை, சென்னையில் ரூ.96.04 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
அகமதாபாத் விமான விபத்து: இத்தாலி நாளிதழ் வெளியிட்ட செய்தி அறிக்கையால் பரபரப்பு
12 Feb 2026ரோம், அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என்று இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா செரா' வெளியிட்டுள்ள செய்தி அறிக
-
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல்: அதிபர் ட்ரம்ப்
12 Feb 2026நியூயார்க், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பின் அதிபர் ட்ரம்ப் எச்சரி
-
கராச்சி: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி
12 Feb 2026கராச்சி, கராச்சியின் வெவ்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு நடந்த நான்கு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் நான்கு பேர் பலியாகினர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்
-
அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திரா பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு
12 Feb 2026நியூயார்க், அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திராவை சேர்ந்த பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சியாட்டில் நகர நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
மகாசிவராத்திரி, வார இறுதி நாட்கள்: தமிழ்நாடு முழுவதும் 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
12 Feb 2026சென்னை, மகாசிவராத்திரி (பிப்.15) மற்றும் வார இறுதி தினங்களை முன்னிட்டு 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ள
-
ராகுலுடன் பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு
12 Feb 2026டெல்லி, டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேற்று சந்தித்துப் பேசினார்.
-
ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப், டெலிகிராம் திடீர் நீக்கம் 10 கோடி மக்கள் அவதி
12 Feb 2026மாஸ்கோ, ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப் நீக்கக்கப்பட்டதால் 10 கோடி பேர் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
-
தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்: ராகுலை பதவி நீக்கக்கோரி தனிநபர் தீர்மானம் தாக்கல்
12 Feb 2026டெல்லி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி தனிநபர் தீர்மான நோட்டீஸை பா.ஜ.க. எம்.பி.
-
இந்தியா, ஜப்பான், கொரியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் சிறப்புமிக்கது: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கருத்து
12 Feb 2026நியூயார்க், இந்தியா, ஜப்பான், கொரியா மற்றும் பிற நாடுகளுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
பிரான்சிடம் ரூ.3.25 லட்சம் கோடியில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
12 Feb 2026புதுடெல்லி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்
-
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.462.58 கோடி..! பார்லி.யில் மத்திய அரசு தகவல்
12 Feb 2026புதுடெல்லி, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் (2021-2025) பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மத்திய அரசு ர


