முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை மாநகராட்சி துணை மேயராக அ.தி.மு.க. வேட்பாளர் ஜெகநாதன் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

நெல்லை அக்-- 30 - நெல்லை மாநகராட்சியின் துணை மேயராக அ.தி.மு.க. வேட்பாளர் ஜெகநாதன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நெல்லை மாநகராட்சி மேயர், மற்றும் மாநகராட்சியில் உள்ள 55 வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் கடந்த 17ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் விஜிலா சத்யானந்த் 24854 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றிபெற்று   புதிய மேயராக கடந்த 25ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். இது தவிர மொத்தமுள்ள 55 வார்டுகளில் 30 இடங்களையும் அ.தி.மு.க. கைப்பற்றியது .எனவே துணைமேயராகவும் அ.தி.மு.க. வை சேர்ந்த ஒருவரே தேர்ந்த்தெடுக்கப்படுவார் என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நெல்லை மாநகராட்சி துணைமேயர் வேட்பாளராக அ.தி.மு.க. சார்பில் 7வது வார்டு கவுன்சிலர் ஜெகநாதன்(எ)கணேசன் அறிவிக்கப்பட்டார். நெல்லை மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தமுள்ள 55 வார்டுகளில் 30 வார்டுகளை அ.தி.மு.க. கைப்பற்றியது. 14 வார்டுகளில் தி.மு.க. வெற்றிபெற்றது. 5 வார்டுகளில் சயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ம.தி.மு.க. 3 வார்டுகளிலும், காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ஜ.க., தலா ஒரு இடங்களிலும் வெற்றி  பெற்றன. எனவே அ.தி.மு.க. வேட்பாளர் ஜெகநாதன் உறுதியாக வெற்றிபெறுவார் என்கிற நிலையில் நேற்று காலை துணை மேயருக்கான தேர்தல் நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் மாநகராட்சி ஆணையாளர் அஜய்யாதவ் தலைமையில் நடைபெற்றது. மேயர் விஜிலா சத்யானந்த் முன்னிலை வகித்தார். காலை 9.30 மணி முதல் 10மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான நேரம் ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் 7வது வார்டு கவுன்சிலர் ஜெகநாதன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவை கவுன்சிலர்கள் மாதவன், மோகன், ஹயாத், ஹைதர் அலி ஆகியோர் முன்மொழிந்தனர். இவருக்கு எதிராக காலை 10.10 மணிவரை யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாததால் ஜெகநாதன் துணை மேயராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக கமிஷனர் அஜய்யாதவ் அறிவித்தார்.
தொடர்ந்து அவர் வெற்றிபெற்றதற்கான சான்றிதழையும் வழங்கினார். துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகநாதனுக்கு நெல்லை மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், நெல்லை சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன், மற்றும் கட்சி நிர்வாகிகள் தச்சை கணேசராஜா, ஆர்.பி.ஆதித்தன், முன்னாள் எம்.பி.முருகேசன், முன்னாள் மேயர் ஜெயராணி, மகபூப்ஜான், ஜெரால்டு, பரணி சங்கரலிங்கம், சாத்தை நாராயணன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony