எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, நவ. - 22 - பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று செவ்வாய்க் கிழமையன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு பிரச்சினைகள் மற்றும் ஊழல் பிரச்சினைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி புயலைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதே நேரம் சபையை சுமூகமாக நடத்துவதற்காக இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு சபாநாயகர் மீராகுமார் ஏற்பாடு செய்துள்ளார். பாராளுமன்றம் தொடங்குவதற்கு முன்பு இந்த சர்வகட்சி கூட்டம் நடைபெறும். பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்த கூட்டத் தொடர் கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை நீடிக்கும். முதல் நாளான இன்றைய தினம் விலைவாசி பிரச்சினையை எழுப்பி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்த நெருக்கடியை காங்கிரஸ் சமாளிக்குமா என்பதுதான் இன்றைய கேள்வி. நெருக்கடியை சமாளிப்பதற்காகவும், பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்துவதற்காகவும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டத்தை சபாநாயகர் மீராகுமார் இன்று கூட்டி உள்ளார். சபை கூடுவதற்கு முன்பாக இந்த கூட்டம் கூட்டப்பட்டு அப்போது எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை சபாநாயகர் மீராகுமார் கோருவார். இடதுசாரிகளை பொறுத்தவரையில் பொதுவான பிரச்சினைகளில் மற்ற கட்சிகளோடு இணைந்து செயல்பட முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அரசை எதிர்க்கும் மற்ற கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு எதிலும் ஒரு முடிவுக்கு வருவோம் என்று லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் உத்தர பிரதேச மாநிலம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. இந்த மாநிலங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் இந்த கூட்டத் தொடரில் பேசப்படும் என்று தெரிகிறது. உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி, தனது மாநிலத்தை 4 மாநிலங்களாக பிரிக்கப் போவதாக ஒரு திட்டத்தை அறிவித்து அது குறித்து தீர்மானமும் நிறைவேற்றி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார். இது குறித்தும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் விவாதம் எழுப்பப்படும் எனத் தெரிகிறது. மற்றொரு முக்கிய அம்சம், தெலுங்கானா மாநில விவகாரம். ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கோரி அந்த மாநிலத்தில் கடந்த பல நாட்களாகவே போராட்டம் நடந்து வருகிறது. இதனால் அங்கு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எங்கள் கோரிக்கை ஏற்கப்படும் வரை பாராளுமன்றத்தை செயல்பட அனுமதிக்கவே மாட்டோம் என்று தெலுங்கானா பகுதி எம்.பிக்களும் அறிவித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர். எனவே இந்த விவகாரத்தாலும் பாராளுமன்றத்தில் புயல் வீசக்கூடும். ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் பல்வேறு புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பிரமோத் மகாஜன் பதவிக் காலத்தில் முறைகேடு நடந்ததாக கூறி அது தொடர்பாகவும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் சில முன்னாள் செயலாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வோடபோன், ஏர்டெல் அலுவலகங்களிலும் அதிரடி சோதனைகள் நடந்துள்ளன. இந்த விவகாரமும் பாராளுமன்றத்தில் பூதாகரமாக வெடிக்கலாம். பெட்ரோல் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது. இந்த விவகாரமும் சபையில் எழுப்பப்படலாம். மொத்தத்தில் விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற பல பிரச்சினைகளை எழுப்பி சபையில் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதால் ஆளும் அரசான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சற்று கலங்கிப் போயிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. தனித் தெலுங்கானா மாநில பிரச்சினை, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் பிரச்சினை, கறுப்பு பணம், ஊழல் போன்ற பிரச்சினைகளை எழுப்ப தமது கட்சி விரும்புவதாக லோக்சபையின் பா.ஜ.க. தலைமை கொறடா ரமேஷ்பயாஸ் தெரிவித்தார். மேலும் இந்த கூட்டத் தொடரில் மத்திய, மாநில உறவுகள், காஷ்மீர் பிரச்சினை, இந்திய பாகிஸ்தான் உறவு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை எழுப்பவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பல்வேறு பிரச்சினைகளை மையமாக வைத்து இரு சபைகளையும் அடிக்கடி ஒத்திவைக்க பா.ஜ.க மற்றும் இடதுசாரிகள் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரம் எந்த பிரச்சினையாக இருந்தாலும் முழுமையாக விவாதிக்க அரசு தயாராகவே இருக்கிறது என்று பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்தார். முன்னதாக, தலைமை கொறடாக்களின் கூட்டமும் டெல்லியில் நடந்தது. அப்போது கேள்வி நேரம் உட்பட சபையை சுமூகமாக நடத்த வேண்டியதன் அவசியத்தை பல தலைவர்கள் வலியுறுத்தியதாக நிருபர்களிடம் பேசிய பவன்குமார் பன்சால் தெரிவித்தார். சபையை சுமூகமாக நடத்த அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் எதிர்க்கட்சிகளை கேட்டுக் கொண்டார். கடந்த முறை மழைக்கால கூட்டத் தொடர் நடந்த போது பல அலுவல்கள் நடக்கவே இல்லை. காரணம், எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி சபையை நடத்தவிடாமல் இடையூறு செய்தன. இந்த முறையும் லோக்பால் மசோதா உட்பட பல பிரச்சினைகள் எழுப்பப்படவுள்ளன. அரசும் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. இந்த முறையாவது அது நிறைவேறுமா என்பதே பெண் எம்.பிக்களின் கேள்வியாகும். இந்த கேள்விக்கு இந்த கூட்டத் தொடரில் விடை கிடைக்கலாம். இப்படிப்பட்ட ஒரு பரபரப்பான சூழ்நிலையில்தான் பாராளுமன்றம் இன்று கூடுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இ.கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
25 Feb 2026சென்னை, முதுபெரும் அரசியல் தலைவரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (101) சென்னையில் நேற்று காலமானார்.
-
தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள்: மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை
25 Feb 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை நடத்துகிறார்.
-
குமரியில் ரூ. 30 கோடியில் புதிய மினி டைடல் பூங்கா முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
25 Feb 2026கன்னியாகுமரியில் மினி டைடல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
-
என்னுடைய சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருக்கிறேன்: தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எப்போதும் உண்மையாக இருப்பேன்: நாகர்கோவில் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
25 Feb 2026நாகர்கோவில், என்னுடைய சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எப்போதும் உண்மையாக இ
-
தனக்கென வாழாமல் பிறர்காகவே வாழ்ந்தவர்: நல்லகண்ணுவுக்கு இ.பி.எஸ். இரங்கல்
25 Feb 2026சென்னை, சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு மறைவுக்கு அ.தி.மு.க.
-
யாருடன் கூட்டணி என்பது குறித்து ராமதாஸ் இன்று முக்கிய முடிவு
25 Feb 2026திண்டிவனம், பா.ம.க. கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸ் இன்று முடிவு செய்கிறார்.
-
மக்களின் உரிமைகளுக்காக பேராடியவர்: நல்லகண்ணுவுக்கு விஜய் புகழஞ்சலி
25 Feb 2026சென்னை, மக்களின் உரிமைகளுக்காக பேராடியவர் நல்லகண்ணு என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
ராமதாஸ் தொடர்ந்த வழக்கு: அன்புமணி, தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
25 Feb 2026சென்னை, ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் அன்புமணி, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
25 Feb 2026கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு சார்பில் விழா: ரூ. 858.92 கோடியில் நலத்திட்ட உதவிகள்: 3,12,082 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
25 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (25.2.2026) கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில், 632 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் ச
-
இலவச வாக்குறுதிகளை தடைசெய்ய கோரி வழக்கு: தேர்தலுக்கு பிறகு விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி அறிவிப்பு
25 Feb 2026புதுடெல்லி, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது அவச
-
அதானி நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்கும் தமிழக அரசு
25 Feb 2026சென்னை, அதானி நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு மின்சாரம் வாங்கியது.
-
தமிழக காவல் துறைக்கு ரூ.124 கோடியில் புதிய மென்பொருள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
25 Feb 2026சென்னை, தமிழக போலீஸ் துறைக்கு ரூ.124.37 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மென்பொருளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
-
போரை நான் தடுத்திருக்காவிட்டால் இந்தியாவின் தாக்குதலில் பாக்., பிரதமர் ஷெரீப் இறந்திருப்பார்: அதிபர் ட்ரம்ப் பரபரப்பு பேச்சு
25 Feb 2026நியூயார்க், போரை நான் தடுத்திருக்காவிட்டால் இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இறந்திருப்பார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளது மீண்டு
-
இன்றைய நாள் எப்படி?
25 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
25 Feb 2026- ஆழ்வார் திருநகரியில் மாசி உற்சவாரம்பம்.
- கோவை கோணியம்மந் கிளி வாகனம்.
- திருச்செந்தூர் முருகன் கோ ரதம், இரவு சுவாமி வெள்ளி சப்பரம். அம்பாள் இந்திர வாகனம்.


