முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளைஞர்கள் அரசியலுக்கு வர ராகுல்காந்தி அழைப்பு

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, நவ.- 29 - இந்திய அரசியல் முறையில் ஊழல் மலிந்துகிடக்கிறது. இந்த ஊழலை அகற்ற இப்போதுள்ள இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று ராகுல்காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகனுமான ராகுல்காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், நாட்டின் இப்போதைய அரசியல் முறையில் ஊழல் மலிந்துகிடக்கிறது என்றும் இந்த அரசியல் முறையை மாற்றி அமைக்க அதிகமான இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நாட்டிலுள்ள மக்கள் எல்லோரும் இப்போது ஊழலைப் பற்றியே பேசுகிறார்கள். ஆனால் அந்த ஊழல் இப்போதைய அரசியல் முறையில்தான் அதிகமாக மண்டிக்கிடக்கிறது. இந்த ஊழலை ஒழிக்கவும், அரசியல் முறையை மாற்றி அமைக்கவும், அதிகமான இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நாட்டிலுள்ள ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு இளைஞர் காங்கிரசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களின் நன்மைக்காக பாடுபட வேண்டும் என்று ராகுல்காந்தி கேட்டுக்கொண்டார். ஏழைகளிடமும் நலிவடைந்த மக்களிடமும் இதர பின்தங்கிய மக்களிடமும் இளைஞர் காங்கிரசார் சென்று அவர்களின் கரங்களை பிடித்து அவர்களின் பிரச்சனைகளை என்னவென்று கேட்டறியுங்கள். பிறகு அவர்களின் பிரச்சனைகளுக்காக போராடுங்கள் என்றும் அவர்  கேட்டுக்கொண்டார். ஏழைகள் நல்ல வாழ்க்கைத்தரத்தை பெற்றால் மட்டுமே இந்த நாடு முன்னேற்றமடையும் என்றும் அவர் கூறினார்.
நம்மிடம் இளைஞர் காங்கிரஸ் பிரிவில்  சுமார் ஒரு கோடி இளைஞர்கள் இருக்கிறார்கள்.  நாட்டிலேயே அதிகமான இளைஞர்களை கொண்ட அமைப்பு இளைஞர் காங்கிரஸ்தான். கடந்த 3 ஆண்டுகளில் இந்த சாதனையை இளைஞர் காங்கிரஸ் நிகழ்த்தியிருக்கிறது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் பிரதிநிதிகள்தான் இப்போது இங்கே இந்த மாநாட்டில் கூடியிருக்கிறார்கள். இந்த இளைஞர் காங்கிரஸ் பதவிகளுக்கு யாரும் தன்னிச்சையாக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். இந்த இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 8 ஆயிரம் இளைஞர் காங்கிரஸ் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ராகுல்காந்தி தற்போது இளைஞர் காங்கிரஸ் விவகாரங்களை பொறுப்பேற்று கவனித்து வருகிறார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago