முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: ஈரான் அதிபர் பெசாஸ்கியன்

செவ்வாய்க்கிழமை, 3 பெப்ரவரி 2026      உலகம்
Pezeshkian-2026-02-03

தெக்ரான், அமெரிக்கா உடன் நியாயமான மற்றும் சமமான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வெளியுறவுத்துறை அமைச்சரிடம் ஈரான் அதிபர் பெசாஸ்கியன் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்யப்பட்டால், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கு ஏற்றவகையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் ஈரான் நோக்கி நகரத்தொடங்கின. இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.

இதற்கிடையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் துருக்கி சென்றுள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றத்தை தணிக்க துருக்கி முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும், மத்தியஸ்தரராக செயல்படவும் விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்கா உடன் நியாயமான மற்றும் சமமான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வெளியுறவுத்துறை அமைச்சரிடம் ஈரான் அதிபர் பெசாஸ்கியன் வலியுறுத்தியுள்ளார். ஆனால், பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று அமெரிக்கா இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருந்தாலும் ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளதால் பதற்ற நிலை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து