முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூனைக்கு ரூ. 60 கோடி சொத்து இத்தாலி மூதாட்டியின் தாராளம்

திங்கட்கிழமை, 12 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

ரோம், டிச.- 12 - இத்தாலியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது செல்லப் பூனைக்கு ரூ. 60 கோடி சொத்தை எழுதிவைத்து அந்த பூனையை சிறந்த முறையில் பராமரிக்க  தாதி ஒருவரை பாதுகாவலராக அமர்த்தியுள்ளார். இத்தாலியைச் சேர்ந்தவர் மரியா அகந்தா (94) இவர் ஒரு கோடீஸ்வரரை திருமணம் செய்தார். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.  இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ரோட்டில் திரிந்த கறுப்புப் பூனை ஒன்றை பாசமுடன் எடுத்து வளர்த்துவந்தார் அகந்தா. அந்த பூனையும் அவரிடம் மிகவும் பிரியமாக இருந்தது. அதற்கு டொமாசோ என்று பெயரிட்டிருந்தார். இந்த நிலையில் மரியாவுக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. இதனால் பயந்துபோன அவர், ரோம், மிலன் ஆகிய நகரங்களில் உள்ள தனது வீடுகளையும், நிலங்களையும் பூனை டொமாசோவின் பெயரில் எழுதிவைத்தார். இதற்கிடையே கடந்த 2 வாரத்திற்கு முன்பு அவர் மரணமடைந்தார். பூனைக்கு எழுதிவைத்த சொத்துக்களைக் கொண்டு பூனையை சிறந்த முறையில் பராமரிக்கும்படி பல மிருக நல அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் இதனை அந்த அமைப்புகள் நிராகரிக்கவே தாதி ஸ்டெபானியாவின் உதவியை நாடினார் மூதாட்டி மரியா அகந்தா. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony