முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலமன் தீவுகளில் கடும் நிலநடுக்கம்

புதன்கிழமை, 11 ஜனவரி 2012      உலகம்
Image Unavailable

 

சிட்னி, ஜன.11 - சாலமன் தீவுகளில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 அலகுகளாக பதிவானது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என்று புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பப்புவா நியு கினியாவுக்கு கிழக்கே சாலமன் தீவுகள் அமைந்துள்ளது. 28,400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள சாலமன் தீவுகளின் தலைநகர் ஹொனியாரா, இங்குள்ள கிராகிரா நகருக்கு கிழக்கே 150 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஹவாயை சேர்ந்த பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் தெரிவித்துள்ளது. பொதுவாக நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளை தாண்டும் போது சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். அதிலும் கடல் சூழ்ந்துள்ள சாலமன் தீவுகளில் இதற்கான சாத்தியங்கள் அதிகமிருந்தும் அதிர்ஷ்டவசமாக சுனாமி ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நிலநடுக்கத்தையொட்டி பேரிடர் மேலாண்மை பணிகள் முடுக்கி விடப்பட்டு முன் எச்சரிக்கை பணிகளும் முடுக்கி விடப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அடிக்கடி நில நடுக்கம் ஏற்படும் பசிபிக் பிராந்தியத்துக்குள் சாலமன் தீவுகள் வருவதால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. 2007 ம் ஆண்டு இங்கு 8.1 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பேரலையில் 52 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடு இழந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony