எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.24 - டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவராக ஓய்வு டி.ஜி.பி. ஆர்.நடராஜை தமிழக அரசு நியமித்து நேற்று அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் செல்லமுத்து, உறுப்பினர்கள் 13 பேர் வீடுகளில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.
மேலும் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள், புதிதாக பணியில் சேர்ந்த ஊழியர்கள், புரோக்கர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து செல்ல முத்து கடந்த வாரம் பதவியை ராஜினாமா செய்தார். புதிய டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஓய்வுபெற்ற டி.ஜி.பி. ஆர்.நடராஜை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஆர். நடராஜ் நேற்று காலை பொறுப்பேற்றார். இந்த பதவியில் ஆர்.நடராஜ் ஒரு ஆண்டு காலம் இருப்பார். டி.என்.பி.எஸ்.சி. தலைவராக பொறுப்பேற்று இருக்கும் ஆர்.நடராஜ் காவல்துறை இயக்குனர், சென்னை போலீஸ் கமிஷனர், தீயணைப்பு துறை இயக்குனர் ஆகிய உயர் பதவிகளை வகித்தவர். 36 ஆண்டுகள் காவல் துறையில் திறம்பட பணியாற்றி பெருமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


