எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெங்களூர், பிப்.- 15 - கல்லூரி நிகழ்ச்சியின்போது மேடையில் மயங்கி விழுந்த கர்நாடக மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் மரணமடைந்தார். கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சதானந்த கவுடா தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சராக வி.எஸ்.ஆச்சார்யா(71) இருந்துவந்தார். இந்நிலையில் ஆச்சார்யா கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நேற்று காலை மங்களூரில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தார். விமான நிலையத்தில் இருந்து நேராக நிருபதுங்கா ரோட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சென்றார். அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், திடீரென்று மேடையிலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மல்லிகே மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். அவருக்கு சாந்தா என்ற மனைவியும் 4 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அரசியலில் நேர்மையானவர் என்று பெயரெடுத்த ஆச்சார்யா கர்நாட மாநில உள்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான ஆச்சார்யா 19 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025