எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அடிலெய்டு, பிப். - 15 - ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அடிலெய்டு நகரில் நடந்த இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. காமன்வெல்த் பேங்க் சார்பிலான முத்தரப்பு ஒரு நாள் தொடர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 2 வார காலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா , இந்தியா மற்றும் இலங்கை ஆகிய 3 நாடுகள் கோப்பைக்காக களம் இறங்கியுள்ளன. அடிலெய்டு நகரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த இரு அணிகளும் ஏற்கனவே ஏஒரு முறை மோதி விட்டன, இது இரண்டாவது முறையாக இரு அணிகளும் மோதின.
முன்னதாக நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இருந்தது. எனவே இந்திய அணி மீண்டும் வெற்றி பெற்று விடும்என்று ரசிகர்கல் எதிர்பார்த்தனர். ஆனால் முதல் போட்டியில் அடிவாங்கிய இலங்கை அணி இன்தப் போட்டியில் கடும் சவாலை அளித்தது. இதனால் இந்தப்போட்டி இரு அணிகளுக்கும் வெற்ஹி தோல்வி இன்றி இறுதியில் டிராவில் முடிவடைந்தது. இலங்கை அணிக்கு எதிரான இந்த லீக் ஆட்டத்தில் துவக்க வீரர் கெளதம்காம்பீர் மற்றும் கேப்டன் தோனி இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்துஅணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தனர். பெளலிங்கின் போது, வினய் குமார் நன்றாக பந்து வீசி 3 முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றினார். அஸ்வின் 2 விக்கெட் எடுத்தார். தவிர, பதான் 1 விக்கெட் எடுத்தார். அடிலெய்டில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 236 ரன்னை எடுத்தது. இலங்கை அணி தரப்பில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சண்டிமால் அதிகபட்சமாக 91 பந்தில் 81 ரன்னை எடுத்தார். தவிர, ஜெயவர்த்தனே 49 பந்தில் 43 ரன்னையும், சங்கக்கரா 56 பந்தில் 31 ரன்னையும், சேனனாயகா 22 ரன்னையும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் வினய்குமார் 46 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். அஸ்வின் 30 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். தவிர பதாந் 1 விக்கெட் எடுத்தார். இந்திய அணி 237 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை இலங்கை அணி வைத்தது. பின்பு களம் இறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்னை எடுத்தது.
இரு அணிகளும் ஒரே மாதிரியான ஸ்கோரை எடுத்ததால் இந்தப் போட்டி வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிவடைந்தது. கேப்டன் தோனி இறுதிவரை நிலைத்து ஆடியதால் போட்டி டிராவானது.
இந்தப் போட்டியில் இந்திய அணி தரப்பில்துவக்க வீரரான காம்பீர் அதிகபட்சமாக, 106 பந்தில் 91 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் ரன் அவுட்டானார்.
கேப்டன் தோனி 69 பந்தில் 58 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
தவிர, டெண்டுல்கர், கோக்லி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தலா 15 ரன்னும், அஸ்வின் 14 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர்.
இலங்கை அணி சார்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான மலிங்கா 53 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட எடுத்தார். பெரீரா 45 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, குலசேகரா 1 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனா காம்பீர் தேர்வு செய்யப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியாவுக்கு வாருங்கள்: வங்கதேசத்தின் புதிய பிரதமருக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு
18 Feb 2026புதுடெல்லி, இந்தியாவுக்கு வருகைப்புரியுமாறு வங்கதேசத்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
மெரீனாவில் ரோப் கார் சேவை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
18 Feb 2026சென்னை, சென்னஐ மெரீனாவில் கடற்கரையில் ரோப் கார் சேவை கொண்டுவரப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
-
மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பு: போர் விமானங்களை குவித்த அமெரிக்கா
18 Feb 2026நியூயார்க், மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக போர் விமானங்களை குவித்து ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
-
ஆட்சியில் பங்கு குறித்து மாணிக்கம் தாகூர் பேச்சு: காங்., தலைமை மீது தி.மு.க. அதிருப்தி?
18 Feb 2026சென்னை, மாணிக்கம் தாகூர் மீது காங்கிரஸ் தலைமை எந்த நடவடிக்கை எடுக்காததால் தி.மு.க. தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் தவக்காலம் உலகம் முழுவதும் துவக்கம்: பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
18 Feb 2026சென்னை, கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் 40 நாட்கள் தவக்காலம் நேற்று முதல் உலகம் முழுவதும் துவங்கியது.
-
நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
18 Feb 2026சென்னை, நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
தொடர் சரிவில் தங்கம் விலை: 3 நாட்களில் ரூ.1680 குறைவு
18 Feb 2026சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,840-க்கு விற்பனையானது.
-
உலகம் முழுவதும் முடங்கிய யூடியூப்!
18 Feb 2026நியூயார்க், உலகம் முழுவதும் பல நாடுகளில் நேற்று யூடியூப் முடங்கியதால் பயனர்கள் அவதியடைந்தனர்.
-
அமெரிக்க ராணுவத்தை அழிப்போம்: அதிபர் ட்ரம்ப்புக்கு ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை
18 Feb 2026தெஹ்ரான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாங்கள் உலகின் வலிமையான ராணுவப் படையை கொண்டுள்ளோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
-
திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் நான் போட்டியிடும் தொகுதியை அறிவிப்பேன்: சீமான்
18 Feb 2026திருச்சி, திருச்சி திண்டுக்கல் ரோடு ஆலம்பட்டி புதூரில் வருகிற 21-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது.
-
ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட 2 ஆயிரம் குழந்தைகள் மீட்பு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
18 Feb 2026கீவ், குழந்தைகளை திரும்ப கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக 2000 குழந்தைகள் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
டெல்லி ஏ.ஐ. உச்சி மாநாடு பிப்ரவரி 21 வரை நீட்டிப்பு
18 Feb 2026டெல்லி, டெல்லியில் நடைபெறும் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு பிப்.21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்த ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தல்
18 Feb 2026ஜெனீவா, எப்ஸ்டீன் கோப்புகளில் வெளிவந்துள்ள குற்றச்சாட்டுகள் மனித குலத்துக்கே எதிரானவை என்று ஐ.நா.வின் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
18 Feb 2026- சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- வேதாரண்யம் சிவபெருமான் புறப்பாடு
- நத்தம் மாரியம்மன் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
18 Feb 2026



