எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் பிப்.- 29 - புதிய வாடகை ஒப்பந்தம் மற்றும் புதியதாக டெண்டரில் கலந்து கொண்ட லாரிகளுக்கு வேலை அளிக்காதது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நள்ளிரவு முதல் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில கேஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் சமையல் கேஸ் விநியோகத்தை மத்திய அரசுக்கு சொந்தமான ஐ.ஓ.சி.,பி.பி.சி,எச்.பி.சி. ஆகிய 3 ஆயில் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. இதற்காக சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடகை ஒப்பந்தம் மேற்கொள்கின்றன. நாமக்கலை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு, ஆந்திரா,கேரளா, கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய 5 மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல எல்.பி.ஜி.கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமான டேங்கர் லாரிகள் உள்ளன. ஆயில் நிறுவனங்களுடன் போடப்பட்ட வாடகை ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபர் 31 ந் தேதியுடன் முடிந்துவிட்டது.கடந்த 4 மாதம் ங்களுக்கு முன்பு ஆயில் நிறுவனங்கள் அறிவித்த டெண்டரில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் 4100 டேங்கர் லாரிகளுக்கு பணி ஆணை அளிக்க கோட் செய்திருந்தனர். ஆனால் ஆயில் நிறுவனங்கள் புதியதாக கலந்து கொண்ட 600 லாரிகளுக்கு வேலை அளிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து அனைத்து வாகனங்களுக்கும் வேலை அளிக்க வேண்டும். வாடகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் 12 ந் தேதி முதல் கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர். இதில் தமிழக அரசு தலைமையிட்டு பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் பிப்ரவரி இறுதிக்குள் வாடகையை உயர்த்தி வழங்குவது, அனைத்து டேங்கர் லாரிகளுக்கும் வேலை வாய்ப்பு அளிப்பது என ஆயில் நிறுவனங்களின் சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றனர். இந்த ஸ்டிரைக் 7 நாட்கள் நீடித்தது. இன்றுடன் பிப்ரவரி மாதம் முடியும் தருவாயில் எண்ணெய் நிறுவனங்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஒத்துக் கொண்டபடி வாடகையை உயர்த்தி வழங்கவில்லை.
எனவே இந்த சூழ்நிலையில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நேற்று காலை நாமக்கலில் நடைப்பெற்றது. சங்க தலைவர் பொன்னம்பலம் தலைமை வகித்தார்.இதில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி, டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட பல மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இன்று 29 ந் தேதி நள்ளிரவு முதல் 5 மாநில டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து மாநில தலைவர் பொன்னம்பலம் நிருபர்களிடம் கூறியதாவது. ஆயில் நிறுவனங்கள் புதியதாக டெண்டரில் கலந்து கொண்ட 600 வாகனங்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாகவும், புதிய வாடகை ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது என்றும் உறுதி அளித்தது. ஆனால் இதுவரை ஆயில் நிறுவன அதிகாரிகளுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. எனவே நாளை(இன்று) நள்ளிரவு முதல் 4100 கேஸ் டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. கோரிக்கைகளை எழுத்துபூர்வமாக ஆயில் நிறுவனங்கள் ஒப்புக் கொள்ளும் வரை போராட்டம் நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த 5 மாநில எல்.பி.ஜி.கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கால வரையற்ற போராட்டம் அறிவித்துள்ளதால் இந்த 5 மாநிலங்களிலும் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியாவுக்கு வாருங்கள்: வங்கதேசத்தின் புதிய பிரதமருக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு
18 Feb 2026புதுடெல்லி, இந்தியாவுக்கு வருகைப்புரியுமாறு வங்கதேசத்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
மெரீனாவில் ரோப் கார் சேவை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
18 Feb 2026சென்னை, சென்னஐ மெரீனாவில் கடற்கரையில் ரோப் கார் சேவை கொண்டுவரப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
-
மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பு: போர் விமானங்களை குவித்த அமெரிக்கா
18 Feb 2026நியூயார்க், மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக போர் விமானங்களை குவித்து ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
-
தொடர் சரிவில் தங்கம் விலை: 3 நாட்களில் ரூ.1680 குறைவு
18 Feb 2026சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,840-க்கு விற்பனையானது.
-
ஆட்சியில் பங்கு குறித்து மாணிக்கம் தாகூர் பேச்சு: காங்., தலைமை மீது தி.மு.க. அதிருப்தி?
18 Feb 2026சென்னை, மாணிக்கம் தாகூர் மீது காங்கிரஸ் தலைமை எந்த நடவடிக்கை எடுக்காததால் தி.மு.க. தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் தவக்காலம் உலகம் முழுவதும் துவக்கம்: பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
18 Feb 2026சென்னை, கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் 40 நாட்கள் தவக்காலம் நேற்று முதல் உலகம் முழுவதும் துவங்கியது.
-
உலகம் முழுவதும் முடங்கிய யூடியூப்!
18 Feb 2026நியூயார்க், உலகம் முழுவதும் பல நாடுகளில் நேற்று யூடியூப் முடங்கியதால் பயனர்கள் அவதியடைந்தனர்.
-
நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
18 Feb 2026சென்னை, நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
அமெரிக்க ராணுவத்தை அழிப்போம்: அதிபர் ட்ரம்ப்புக்கு ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை
18 Feb 2026தெஹ்ரான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாங்கள் உலகின் வலிமையான ராணுவப் படையை கொண்டுள்ளோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
-
ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட 2 ஆயிரம் குழந்தைகள் மீட்பு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
18 Feb 2026கீவ், குழந்தைகளை திரும்ப கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக 2000 குழந்தைகள் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் நான் போட்டியிடும் தொகுதியை அறிவிப்பேன்: சீமான்
18 Feb 2026திருச்சி, திருச்சி திண்டுக்கல் ரோடு ஆலம்பட்டி புதூரில் வருகிற 21-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது.
-
டெல்லி ஏ.ஐ. உச்சி மாநாடு பிப்ரவரி 21 வரை நீட்டிப்பு
18 Feb 2026டெல்லி, டெல்லியில் நடைபெறும் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு பிப்.21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்த ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தல்
18 Feb 2026ஜெனீவா, எப்ஸ்டீன் கோப்புகளில் வெளிவந்துள்ள குற்றச்சாட்டுகள் மனித குலத்துக்கே எதிரானவை என்று ஐ.நா.வின் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
18 Feb 2026- சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- வேதாரண்யம் சிவபெருமான் புறப்பாடு
- நத்தம் மாரியம்மன் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
18 Feb 2026



