முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காரைக்குடியில் பிளஸ் 2 ,டிப்ளமோ படித்த மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2019      சிவகங்கை
Image Unavailable

 காரைக்குடி.- காரைக்குடியில் சண்முகநாதன் பொறியியல் கல்லூரி சார்பில் பிளஸ்2 டிப்ளமோ படித்த மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் முத்துராமு வரவேற்றார். கல்லூரி தலைவர் பிச்சப்பா மணிகண்டன் தலைமை வகித்தார். கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி துவக்கிவைத்து பேசுகையில் “பிளஸ் 2 முடித்ததற்கு பிறகு மாணவர்களுக்கு ஏகப்பட்ட கனவுகள் இருக்கும். எது படித்தாலும் அந்த துறையில் உங்களுக்கு என தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் வரும் 2023 முதல் 2025க்குள் உலகம் டிஜிட்டல்மயமாக மாறிவிடும். எனவே டெக்னாஜி சார்ந்த படிப்பை தேர்வு செய்து படித்தால் நிச்சயம் வேலைவாய்ப்பு கிடைக்கும். சேல்போனில் அதிக நேரம் செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். புதிய சிந்தனை வேண்டும். திறமை டெக்னாலஜி வளர்த்துக் கொள்ள வேண்டும். எதிர்கால வாய்ப்பு என்ன என பார்க்க வேண்டும். போட்டிகளில் அதிக அளவில் கலந்துகொள்ள வேண்டும். அயல்நாட்டு மொழி ஏதாவது ஒன்றை தெரந்து கொள்ள வேண்டும், என்றார். கல்லூரி செயலாளர் விஸ்வநாதன், பேச்சாளர் ஈரோடு மகேஷ், கல்;வியாளர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து