எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவில்பட்டி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட கழுகுமலையில் தினகரன் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் கழுகுமலை தொடக்க கூட்டுறவு வங்கி தலைவர் முத்தையா தலைமையில் 15-வது வார்டுக்குட்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை அமைச்சர் கடம்பூர் ராஜு சால்வை அணிவித்து இன்முகத்துடன் வரவேற்றார். தொடர்ந்து முத்தையா கூறும் போது, அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அம்மா கூறியது போல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க.வை அழிக்கமுடியாது. என்பதை நிரூபிக்கும் வகையில் கழுகுமலையில் உள்ள அனைத்து வார்டுகளில் உள்ள தினகரன் கட்சியினர் அ.தி.மு.க.வில் மீண்டும் இணைத்துக் கொண்டோம் என்று கூறினார் இந்த இணைப்பு விழாவில் அ.தி.மு.க. கோவில்பட்டி பெரு நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், எம்ஜிஆர் மன்றம் குருநாதன், இளைஞர் பாசறை பழனிகுமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் ராமச்சந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


