முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீட்டில் அணைத்து விளக்கேற்றுங்கள் இன்று தெரு விளக்குகளை அணைக்க வேண்டாம் : மத்திய அரசு விளக்கம்

சனிக்கிழமை, 4 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் சக்தியை ஒன்றிணைக்கும் வகையில் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள மின் விளக்குகளை மட்டுமே அணைக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார், இந்த நிலையில் தெரு விளக்குகளை அணைக்க வேண்டாம் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இன்று 5-ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து விட்டு, டார்ச், அகல், செல்லிடப்பேசி மூலம் விளக்குகளை ஒளிர விட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். இதையடுத்து, ஒரே சமயத்தில் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு, மீண்டும் ஒரே சமயத்தில் மின் விளக்குகள் போடும் போது மின் அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டு பிரச்னைகள் ஏற்படும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய அரசு ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

அதில், பிரதமர் மோடி, ஏப்ரல் 5-ம் தேதி 9 மணிக்கு வீட்டில் உள்ள மின் விளக்குகளை மட்டுமே அணைக்கச் சொல்லியிருக்கிறார். ஆனால் அதே சமயம் தெரு விளக்குகளை அணைக்க வேண்டாம். வீட்டில் உள்ள கணினி, தொலைக்காட்சி, மின் விசிறி, குளிர்பதனப்பெட்டி, குளிர்சாதன இயந்திரம் உள்ளிட்டவற்றை வழக்கம் போல இயக்கலாம்.  வெறும் மின் விளக்குகளை மட்டுமே அணைக்க வேண்டும். அதே சமயம், மருத்துவமனைகள், பொதுவிடங்கள், அலுவலகங்கள், காவல்நிலையங்கள், உற்பத்தி ஆலைகள், ஆகியவற்றில் மின் விளக்குகளை அணைக்க வேண்டியதில்லை. வீடுகளில் உள்ள மின் விளக்குகளை மட்டுமே அணைக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். எனவே, உள்ளாட்சி அமைப்புகள், தெரு விளக்குகளை அணைக்க வேண்டாம், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து