எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியில் 34 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், சென்னை, அரியலூர், தஞ்சாவூர், ஈரோடு, தேனி, கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, நாகப்பட்டினம், திருவாரூர், தருமபுரி, இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 296 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகளையும் முதல்வர் திறந்து வைத்தார்.
நகர்ப்புறங்களில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதல், அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவது உள்ளாட்சி அமைப்புகளின் தலையாய கடமைகளாகும். இத்தகைய பணிகளை மேற்கொள்ளும் உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படை உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியில் 34 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த பட்லூர் மற்றும் 30 குடியிருப்புகளுக்கு 6 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் அபிவிருத்தி திட்டம், தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த அரண்மனைப்புதூர் மற்றும் 4 குடியிருப்புகளுக்கு ஒரு கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தி திட்டம்; போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்தில் கோடாங்கிப்பட்டி மற்றும் 3 குடியிருப்புகளுக்கு 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தி திட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்தில் மஞ்சநாயக்கன்பட்டி மற்றும் 2 குடியிருப்புகளுக்கு 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தி திட்டம், நத்தம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள குடிநீரைப் பயன்படுத்தி திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 20 ஊரகக் குடியிருப்புகளுக்கு 3 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம், ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியம், மைலம்பாடி ஊராட்சியில் உள்ள 54 குடியிருப்புகளுக்கு 5 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தற்போது பயன்பாட்டில் உள்ள வரதநல்லூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தை அபிவிருத்தி செய்து வழங்கும் கூட்டு குடிநீர் அபிவிருத்தி திட்டம்,
அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி மற்றும் விடுபட்ட பகுதிகளுக்கு 30 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டம், கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் 75 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டம், நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி, விருத்தாசலம் சாலையில் உள்ள வாரச் சந்தை வளாகத்தில் 2 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகக் கட்டிடம், தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மாநகராட்சி, காந்திஜி சாலையில் 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி அலுவலகக் கட்டிடம் மற்றும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நோயாளிகள் உடனிருப்போர் தங்கும் கட்டிடம், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சி, கணேசபுரத்தில் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நோயாளிகள் உடனிருப்போர் தங்கும் கட்டிடம்,
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி மற்றும் முகலிவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு 126 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான விரிவான குடிநீர் வழங்கும் திட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை மாவட்டம், திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட மல்லிகாபுரம், அடையாறு மண்டலத்திற்குட்பட்ட வேளச்சேரி ஆகிய இடங்களில் ஒரு கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலை மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம் ஆகிய இடங்களில் 21 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 நகர்ப்புர சமூகநல மருத்துவமனைகள், பேரூராட்சிகள் நிர்வாகம் சார்பில் சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூர் பேரூராட்சியில் ஒரு கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை கட்டிடம், மதுரை மாவட்டம், பாலமேடு பேரூராட்சியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சந்தை கட்டிடம், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம், நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் பேரூராட்சியில் 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சந்தை கட்டிடம், திருவாரூர் மாவட்டம், குடவாசல் பேரூராட்சியில் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை கட்டிடம், இராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சந்தை கட்டிடம் என மொத்தம் 330 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கான திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் க. சண்முகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் சி.என். மகேஸ்வரன், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டி.என். ஹரிஹரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
உதய்பூரில் இன்று நடக்கும் திருமண நிகழ்வில் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகாவை கரம் பிடிக்கிறார்
01 Feb 2026ஐதராபாத், விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி ராஜஸ்தானின் உதய்பூரில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இன்று திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
-
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி தகுதிக்கான ‘டெட்’ தேர்வில் 1.50 லட்சம் பேர் தேர்ச்சி
01 Feb 2026சென்னை, பள்ளி ஆசிரியர் பணித் தகுதிக்கான ‘டெட்’ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு 1.50 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் இல்லை: பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.பி.,க்கள் கடும் முழக்கம்
01 Feb 2026புதுடெல்லி, பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என தி.மு.க. எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர்.
-
மத்திய பட்ஜெட்டில் எஸ்.டி.டி.யை அதிகரித்ததால் பங்குச்சந்தைகள் திடீர் வீழ்ச்சி
01 Feb 2026புதுடெல்லி, மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எஸ்.டி.டி.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
01 Feb 2026புதுடெல்லி, சி.பி.ஐ. புலன்விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
-
மத்திய பட்ஜெட் 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் உள்ளது: பிரதமர் நரேந்திரமோடி புகழாரம்
01 Feb 2026புதுடெல்லி, தொலைநோக்குடன், நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில
-
ஜனவரி மாதம் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1.93 லட்சம் கோடி..!
01 Feb 2026புதுடெல்லி, கடந்த ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல்(சரக்கு மற்றும் சேவை வரி) ரூ.1.93 லட்சம் கோடியை தாண்டியது.
-
தைப்பூசத் திருநாள்: இ.பி.எஸ். வாழ்த்து
01 Feb 2026சென்னை, தைப்பூசத் திருநாள் வினைகள் விலகி வெற்றிகள் மலரும் நாள் என எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: தைப்பூசத்திற்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி
01 Feb 2026புதுடெல்லி, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று தைப்பூசத்தை முன்னிட்டு தமிழில் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.17.2 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு: பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2026டெல்லி, வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.1.27 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
சாமானிய மக்களுக்கு எதுவும் இல்லை: மத்திய பட்ஜெட் குறித்து மம்தா கருத்து
01 Feb 2026டெல்லி, 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களுக்கு விரோதமான பட்ஜெட் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு ஜனாதிபதியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
01 Feb 2026டெல்லி, 2026 - 27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு ஜனாதிபதி திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார்.
-
முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்வி வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்குத் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன் நிதியமைச்சக குழுவினருடன் நிர்மலா சீதாராமன் புகைப்படம்
01 Feb 2026டெல்லி, எதிர்வரும் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட், பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
-
லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிப்பு
01 Feb 2026டெல்லி, மின்சார வாகனங்களை ஊக்குவிக்க லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எச்.ராஜாவை நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
01 Feb 2026சென்னை, பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார்.
-
வார ராசிபலன்
01 Feb 2026


