எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லக்னோ : கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த உத்தர பிரதேச மாநில கேபினட் அமைச்சர் கமலா ராணி வருண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் கேபினட் அமைச்சரவையில் இடம் பிடித்திருந்தவர் கமலா ராணி வருண்.
58 வயதான இவருக்கு கடந்த மாதம் ஜூலை 17-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் நேற்று அயோத்தி சென்று ராமர் கோவில் பூமி பூஜை குறித்து ஆய்வு செய்ய இருந்தார். கேபினட் அமைச்சர் உயிரிழந்ததை தொடர்ந்து முதல்வர் யோகி தனது அயோத்தி பயணத்தை ரத்து செய்துள்ளார்.
கேபினட் அமைச்சரின் மறைவிற்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியதாவது:- கேபினெட் அமைச்சர் கமல் ராணி வருண் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை அவரின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கிறேன்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பி.ஜி.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் கமல் ராணி. மக்கள் மத்தியில் புகழ்பெற்ற தலைவராகவும், சமூக சீர்திருத்த தலைவராகவும் ராணி திகழ்ந்தார்.
அமைச்சராக பொறுப்பேற்று மிகவும் திறமையாகச் செயல்பட்டவர் கமல் ராணி எனத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியான முதல் எம்.எல்.ஏ. கமல் ராணி வருண் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தமிழகத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் மற்றும் சிறப்பு தொகை ரூ.2,000 உள்பட 1.31 கோடி மகளிர் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு: திராவிட மாடல் 2.0 ஆட்சிக்காலத்தில் உரிமை தொகை ரூ.2,000 ஆக மேலும் உயர்த்தப்படும்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 நேற்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.
-
வார ராசிபலன்
14 Feb 2026


