எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜுலை10 - குஜராத் கலவரத்தின்போது மத வழிபாட்டு தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் அவற்றின் சேத விபரங்களை தெரிவிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பெரும் வகுப்பு கலவரம் ஏற்பட்டது. அப்போது இந்த கலவரத்தில் சுமார் ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். மேலும் மத வழிபாட்டு தலங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் சில வழிபாட்டு தலங்கள் முழுமையாகவும் சில வழிபாட்டு தலங்கள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. இந்த வழிபாட்டு தலங்களின் சேத விபரங்களை ஆய்வு செய்து அதுகுறித்த அறிக்கையை அளிக்கும்படி குஜராத் மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. சேதமடைந்த வழிபாட்டு தலங்களை பழுதுபார்க்கவும், புதிதாக கட்டவும் எவ்வளவு செலவாகும் என்ற விபரத்தையும் தெரிவிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், தீபக்மிஸ்ரா ஆகியோர் தங்களது உத்தரவில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குஜராத் கலவரத்தின்போது வழிபாட்டு தலங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே குஜராத் ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இந்த நஷ்டஈட்டை வழங்குவதற்கு போதுமான பணம் அரசு கஜானாவில் இல்லை என்று குஜராத் அரசு கூறிவிட்டது. மேலும் ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு நேற்று இந்த உத்தரவை பிறப்பித்தது. மத வழிபாட்டு தலங்களுக்கு ஏற்பட்ட சேத மதிப்பு எவ்வளவு? அந்த சேதத்தை சரிக்கட்ட ஆகும் செலவு எவ்வளவு என்ற விபரங்களை தெரிவிக்குமாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர். சேதப்படுத்தப்பட்ட மத வழிபாட்டு தலங்களை சீரமைக்க பொதுமக்கள் பணத்தை பயன்படுத்துவது குறித்து தாங்கள் ஆய்வு செய்ய இருப்பதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். ஒரு வீடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாலோ அல்லது பூகம்பத்தினால் சேதமடைந்தாலோ அந்த வீட்டிற்கு நஷ்ட ஈடு கொடுக்கும்போது சேதப்படுத்தப்பட்ட மத வழிபாட்டு தலங்களுக்கு ஏன் நஷ்ட ஈடு தரக்கூடாது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக மத வழிபாட்டு தலங்களின் சேத விபரங்களையும் அவற்றை சீரமைக்க ஆகும் செலவு விபரங்களையும் பதில் அறிக்கையாக கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜுலை 30 ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியாவுக்கு வாருங்கள்: வங்கதேசத்தின் புதிய பிரதமருக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு
18 Feb 2026புதுடெல்லி, இந்தியாவுக்கு வருகைப்புரியுமாறு வங்கதேசத்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
மெரீனாவில் ரோப் கார் சேவை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
18 Feb 2026சென்னை, சென்னஐ மெரீனாவில் கடற்கரையில் ரோப் கார் சேவை கொண்டுவரப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
-
மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பு: போர் விமானங்களை குவித்த அமெரிக்கா
18 Feb 2026நியூயார்க், மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக போர் விமானங்களை குவித்து ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
-
ஆட்சியில் பங்கு குறித்து மாணிக்கம் தாகூர் பேச்சு: காங்., தலைமை மீது தி.மு.க. அதிருப்தி?
18 Feb 2026சென்னை, மாணிக்கம் தாகூர் மீது காங்கிரஸ் தலைமை எந்த நடவடிக்கை எடுக்காததால் தி.மு.க. தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் தவக்காலம் உலகம் முழுவதும் துவக்கம்: பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
18 Feb 2026சென்னை, கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் 40 நாட்கள் தவக்காலம் நேற்று முதல் உலகம் முழுவதும் துவங்கியது.
-
நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
18 Feb 2026சென்னை, நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
உலகம் முழுவதும் முடங்கிய யூடியூப்!
18 Feb 2026நியூயார்க், உலகம் முழுவதும் பல நாடுகளில் நேற்று யூடியூப் முடங்கியதால் பயனர்கள் அவதியடைந்தனர்.
-
தொடர் சரிவில் தங்கம் விலை: 3 நாட்களில் ரூ.1680 குறைவு
18 Feb 2026சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,840-க்கு விற்பனையானது.
-
அமெரிக்க ராணுவத்தை அழிப்போம்: அதிபர் ட்ரம்ப்புக்கு ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை
18 Feb 2026தெஹ்ரான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாங்கள் உலகின் வலிமையான ராணுவப் படையை கொண்டுள்ளோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
-
திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் நான் போட்டியிடும் தொகுதியை அறிவிப்பேன்: சீமான்
18 Feb 2026திருச்சி, திருச்சி திண்டுக்கல் ரோடு ஆலம்பட்டி புதூரில் வருகிற 21-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது.
-
ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட 2 ஆயிரம் குழந்தைகள் மீட்பு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
18 Feb 2026கீவ், குழந்தைகளை திரும்ப கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக 2000 குழந்தைகள் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
டெல்லி ஏ.ஐ. உச்சி மாநாடு பிப்ரவரி 21 வரை நீட்டிப்பு
18 Feb 2026டெல்லி, டெல்லியில் நடைபெறும் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு பிப்.21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்த ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தல்
18 Feb 2026ஜெனீவா, எப்ஸ்டீன் கோப்புகளில் வெளிவந்துள்ள குற்றச்சாட்டுகள் மனித குலத்துக்கே எதிரானவை என்று ஐ.நா.வின் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
18 Feb 2026- சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- வேதாரண்யம் சிவபெருமான் புறப்பாடு
- நத்தம் மாரியம்மன் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
18 Feb 2026



