எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பாடிப் பறந்த கிளி இப்பூவுலகை விட்டு மறைந்ததால் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர் சிகிச்சை காரணமாக கடந்த 4-ம் தேதி அவர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார். கொரோனா தொற்று நீங்கினாலும், நுரையீரல் தொற்று அதிகரித்துக் கொண்டே இருந்தது.
மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் உறுப்புகளின் செயல்பாடு குறைந்து உடல்நிலை மேலும் மோசமடையத் தொடங்கியது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நண்பகல் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உயிர் பிரிந்தது.
இது இந்தியத் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக எஸ்.பி.பி.யின் நுங்கம்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தல் காலம் என்பதால், முன்னணித் திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் அவருடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், பொதுமக்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்த, எஸ்.பி.பி.யின் நுங்கம்பாக்கம் வீட்டில் கூடினர்.
நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் மருத்துவமனையிலிருந்து எஸ்.பி.பி.யின் உடல் அவருடைய வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது. அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இரவு 9 மணியளவில் அவருடைய உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கூட்டம் அதிகமாக இருந்ததால் திட்டமிடப்பட்டதற்கு முன்னதாக எடுத்துச் செல்லப்பட்டது.
அப்போது எஸ்.பி.பி. உடல் எடுத்துச் செல்லப்பட்ட வண்டியைப் பின்தொடர்ந்து பலரும் வாகனங்களில் பின்தொடர்ந்தனர். சாலைகளின் இருபுறமும் பொதுமக்கள் நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.
பண்ணை வீட்டில் முக்கியப் பிரபலங்களுக்கு மட்டுமே அஞ்சலி செலுத்த அனுமதி என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கூட்டம் அதிகரிப்பால் பொதுமக்கள் சிலரும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டார்கள்.
பாடகர் எஸ்.பி.பி.-க்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி அவரது உடல் அடக்கம் காவல்துறை மரியாதையுடன் நேற்று நடந்தது.
அவரது உடலுக்கு உறவினர்கள் மதச்சடங்கு செய்த பின்னர் காவல்துறை அணிவகுத்து துப்பாக்கியைத் தாழ்த்தி மரியாதை செய்தது. பின்னர் அவரது உடல் இறுதிச் சடங்கு நடத்தப்பட்ட இடத்திலிருந்து உறவினர்கள் சுமந்து செல்ல, காவல்துறை அணிவகுப்புடன் நல்லடக்கம் செய்யும் இடம் நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது.
எஸ்.பி.பி.யின் உடல் அடக்கம் நடக்கும் இடத்தில் உறவினர்கள், ஏராளமான ரசிகர்கள், ஊடகத்தினர், போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நடிகர் விஜய், எஸ்.பி.பி. மகன் சரணிடம் பேசி தனது ஆறுதலைத் தெரிவித்தார்.
பின்னர் எஸ்.பி.பி.யின் உடல் அருகில் சென்ற அவர் அவரைக் காலைத் தொட்டு வணங்கி இறுதி மரியாதையைச் செய்தார். பின்னர் அனைவரின் கண்ணீர் அஞ்சலிக்கு இடையே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அப்போது அணிவகுத்து நின்ற 24 போலீஸார் துப்பாக்கியைத் தாழ்த்தி மீண்டும் மரியாதை செலுத்தினர். பின்னர் 24 போலீஸார் அரசு மரியாதை செலுத்தும் வகையில் வானை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட, 72 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன் முன்னின்று செய்திருந்தார். எப்போதும் ஆயுதப்படை போலீஸார் மட்டுமே சாதாரண தொப்பியுடன் இருப்பார்கள். ஆனால், திருவள்ளூர் போலீஸார் அதற்குரிய சீருடையுடன் வந்து எஸ்.பி.பி.க்கு மரியாதை செலுத்தினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியாவுக்கு வாருங்கள்: வங்கதேசத்தின் புதிய பிரதமருக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு
18 Feb 2026புதுடெல்லி, இந்தியாவுக்கு வருகைப்புரியுமாறு வங்கதேசத்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் தவக்காலம் உலகம் முழுவதும் துவக்கம்: பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
18 Feb 2026சென்னை, கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் 40 நாட்கள் தவக்காலம் நேற்று முதல் உலகம் முழுவதும் துவங்கியது.
-
மெரீனாவில் ரோப் கார் சேவை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
18 Feb 2026சென்னை, சென்னஐ மெரீனாவில் கடற்கரையில் ரோப் கார் சேவை கொண்டுவரப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
-
மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பு: போர் விமானங்களை குவித்த அமெரிக்கா
18 Feb 2026நியூயார்க், மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக போர் விமானங்களை குவித்து ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
-
தொடர் சரிவில் தங்கம் விலை: 3 நாட்களில் ரூ.1680 குறைவு
18 Feb 2026சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,840-க்கு விற்பனையானது.
-
ஆட்சியில் பங்கு குறித்து மாணிக்கம் தாகூர் பேச்சு: காங்., தலைமை மீது தி.மு.க. அதிருப்தி?
18 Feb 2026சென்னை, மாணிக்கம் தாகூர் மீது காங்கிரஸ் தலைமை எந்த நடவடிக்கை எடுக்காததால் தி.மு.க. தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
18 Feb 2026சென்னை, நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
உலகம் முழுவதும் முடங்கிய யூடியூப்!
18 Feb 2026நியூயார்க், உலகம் முழுவதும் பல நாடுகளில் நேற்று யூடியூப் முடங்கியதால் பயனர்கள் அவதியடைந்தனர்.
-
அமெரிக்க ராணுவத்தை அழிப்போம்: அதிபர் ட்ரம்ப்புக்கு ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை
18 Feb 2026தெஹ்ரான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாங்கள் உலகின் வலிமையான ராணுவப் படையை கொண்டுள்ளோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
-
திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் நான் போட்டியிடும் தொகுதியை அறிவிப்பேன்: சீமான்
18 Feb 2026திருச்சி, திருச்சி திண்டுக்கல் ரோடு ஆலம்பட்டி புதூரில் வருகிற 21-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது.
-
ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட 2 ஆயிரம் குழந்தைகள் மீட்பு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
18 Feb 2026கீவ், குழந்தைகளை திரும்ப கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக 2000 குழந்தைகள் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
டெல்லி ஏ.ஐ. உச்சி மாநாடு பிப்ரவரி 21 வரை நீட்டிப்பு
18 Feb 2026டெல்லி, டெல்லியில் நடைபெறும் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு பிப்.21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்த ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தல்
18 Feb 2026ஜெனீவா, எப்ஸ்டீன் கோப்புகளில் வெளிவந்துள்ள குற்றச்சாட்டுகள் மனித குலத்துக்கே எதிரானவை என்று ஐ.நா.வின் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
18 Feb 2026- சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- வேதாரண்யம் சிவபெருமான் புறப்பாடு
- நத்தம் மாரியம்மன் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
18 Feb 2026



