முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் இணைகிறார் பிரபல நடிகை விஜயசாந்தி

செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

ஐதராபாத் : பிரபல நடிகை விஜயசாந்தி பாரதிய ஜனதாவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சமீப காலமாக திரையுலக பிரபலங்கள் பா.ஜ.க.வில் இணைந்து வருகிறார்கள்.  தென்னிந்திய பிரபல நடிகை குஷ்பு சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாரதீய ஜனதாவில் சேர்ந்தார். அடுத்து பிரபல நடிகை விஜயசாந்தி பா.ஜ.க.வில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

1998-ம் ஆண்டு நடிகை விஜயசாந்தி பா.ஜ.க.வில் இருந்த போது இவருக்கு மகளிர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் பா.ஜ.க.வில் இருந்து விலகி அவர் தனிக்கட்சி தொடங்கினார்.

அந்த கட்சிக்கு மக்களிடம் போதிய ஆதரவு இல்லை. எனவே, 2009-ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் இணைந்தார். அந்த கட்சி சார்பில் மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011-ல் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

2014-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார்.  2018-ம் ஆண்டு விஜயசாந்திக்கு காங்கிரசில் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன் பிறகு காங்கிரசுக்காக உழைக்கப் போவதாக கூறினார். 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் விஜயசாந்திக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே, அவர் அந்த கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். அடுத்து மீண்டும் பா.ஜ.க.வில் இணைய திட்டமிட்டுள்ளார். விரைவில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைவார் என்று தெரியவந்துள்ளது. 

இது பற்றி பா.ஜ.க. தேசிய துணைத்தலைவர் டி.கே. அருணா கூறியதாவது:- நடிகை விஜயசாந்தி விரைவில் பா.ஜ.க.வில் இணைகிறார். இது தவிர மேலும் பலர் பா.ஜ.க.வில் இணைய உள்ளனர் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து