எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : உடல்நலக்குறைவு மற்றும் விபத்துக்களில் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில்,
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த விஜயகுமார், செங்கல்பட்டு மாவட்டம், பெருநகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பன்னீர்செல்வம், சென்னை பெருநகர தேனாம்பேட்டை காவல் நிலைய போக்குவரத்து பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஆரோக்கியசாமி, மகாகவி பாரதியார் நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஹரிதாஸ், நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சுகுமாறன், நீலாங்கரை போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சீனிவாசன், கானாத்தூர் காவல் நிலைய சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரிவில் முதல் நிலை காவலராகப் பணிபுரிந்து வந்த செந்தில்குமார், சென்னை காவல் பாதுகாப்பு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த எல்லப்பன், சென்னை, வீராபுரம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 3-ம் அணியில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த தமிழ்க்குமரன், கோயம்புத்தூர் மாநகர காவல் ஆயுதப்படையில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பேச்சிமுத்து; போக்குவரத்து புலனாய்வுப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சந்திரசேகரன், கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பாஸ்கரன், கடலூர் மாவட்டம், முதுநகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த மனோகரன், ஈரோடு மாவட்டம், பவானிசாகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சின்னராஜ்,
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் காவல் நிலையத்தில் பெண் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பவானி, கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஈஸ்வரமூர்த்தி, கரூர் மாவட்டம், தென்னிலை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கணேஷ் பாண்டியன், கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த விஸ்வநாதன், மதுரை மாவட்டம், சாப்டூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த சோலைமலைக்கண்ணன், ஆயுதப்படையில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கண்ணன், நாகப்பட்டினம் மாவட்டம், மணல்மேடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த இராஜேந்திரன், புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஜவஹர்லால் நேரு, இராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திருநாவுக்கரசு; திருவாடானை நெடுஞ்சாலை காவல் ரோந்துப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ராஜா, சேலம் மாவட்டம், கொளத்தூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சதாசிவம், வாழப்பாடி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த
ராஜேந்திரன், திருச்சிராப்பள்ளி மாநகர், கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஹெலன் ரூபி, பொன்மலை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த முனுசாமி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மனோகரன், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மாரியப்பன், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் போக்குவரத்து விசாரணை பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த வீரமணி,
நீலகிரி மாவட்ட ஆயுதப்படைப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சுரேந்திரன், திருநெல்வேலி மாநகரம், நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஹரிகிருஷ்ணன், திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சாமுவேல் பாண்டியராஜன், திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பாலமுருகன், திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மணி, விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சிவசங்கர், விருதுநகர் மாவட்டம், எம்.புதுப்பட்டி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கார்த்திக் ஆகியோர் உடல் நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த மூர்த்தி, சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை28-ம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த தமிழ்ச்செல்வன், கடலூர் மாவட்டம், பண்ருட்டி போக்குவரத்து பிரிவில் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கிருஷ்ணன், மதுரை மாநகர், செல்லூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சசிகுமார், மீனாட்சி அம்மன் கோவில் காவல் நிலைய சட்ட ஒழுங்கு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கோபாலகிருஷ்ணன், சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த நாகராஜன், தஞ்சாவூர் மாவட்டம், ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வந்த காளிமுத்து,
திருப்பூர் மாவட்டம், மங்களம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த யோகமுரளி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலாம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த பிரபாகரன், தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சிவசுப்பிரமணியன், விருதுநகர் மாவட்டம், மாரனேரி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சுப்பாராஜ், நத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணிபுரிந்து வந்த கார்த்திக் பாண்டியன் ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த மிகுந்த வேதனை அடைந்தேன்.
உடல் நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 12 months 2 days ago |
-
ஆம்பூர் கலவர வழக்கில் இன்று தீர்ப்பு
27 Aug 2025திருப்பத்தூர் : ஆம்பூர் கலவரம் வழக்கில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட இருந்த தீர்ப்பு இன்று (ஆக.28-ம் தேதி) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
விநாயகர் சதுர்த்தி விழா: ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து
27 Aug 2025புதுடெல்லி : இந்துக்களின் முதற்கடவுளான விநாயகரை வரவேற்கும் விதமாக, நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
-
காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்: 5 பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 20 பேர் பலி : இந்தியா கடும் கண்டனம்
27 Aug 2025புதுடெல்லி : காசாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியூட்டக்கூடியது என்றும், ஆழ்ந்த வர
-
50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை முக்கிய ஆலோசனை
27 Aug 2025புதுடெல்லி : இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விவகாரம் தொடர்பாக நேற்று பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை நடத்தியது.
-
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் திருப்பூரில் உற்பத்தியை குறைக்க பின்னலாடை நிறுவனங்கள் முடிவு
27 Aug 2025சென்னை : அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்கள் மீது சரமாரியாக வரியை உயர்த்தி வருகிறார்.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: பொதுமக்களிடம் கருத்து கேட்கும் தேர்தல் ஆணையம்
27 Aug 2025டெல்லி : வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
-
பீகாரில் திறந்தவெளி வாகனத்தில் ராகுலுடன் பேரணியில் பங்கேற்றார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
27 Aug 2025சென்னை : பீகாரில் திறந்தவெளி வாகனத்தில் ராகுலுடன் பேரணியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
-
கோடநாடு விவகாரம்: மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
27 Aug 2025ஊட்டி : கோடநாடு பங்களாவை மாவட்ட நீதிபதி மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய
-
மக்கள் சக்திதான் பெரிது என்பதை பீகார் மாநில மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Aug 2025பாட்னா : மக்கள் சக்திக்கு முன் எந்த ஒரு சர்வாதிகாரியும் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்பதை பீகார் மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ
-
தமிழகம் முழுவதும் கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்
27 Aug 2025சென்னை : தமிழகம் முழுவதும் கோவில்களில் நேற்று விநாயகர் சதுர்த்தி வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
-
நெல்லையில் செப்.7 வாக்கு திருட்டு விளக்க மாநாடு : செல்வப்பெருந்தகை அறிவிப்பு
27 Aug 2025நெல்லை : திருநெல்வேலியில் வருகின்ற செப்டம்பர் 7 ஆம் தேதி வாக்குத் திருட்டு விளக்க மாநாடு நடத்தப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
-
பா.ஜ.க.வின் அதிகாரத்தை மக்கள் பறிப்பது நிச்சயம் : பீகாரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
27 Aug 2025முசாபர்பூர் : 'பா.ஜ.க. எப்படி தேர்தல்களை கேலிக்கூத்தாக்கிவிட்டது என்பதை ராகுல் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார்.
-
இந்தியா - பாகிஸ்தான் உட்பட 7 போர்களை நிறுத்தியுள்ளேன் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து
27 Aug 2025நியூயார்க் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் கொரிய அதிபருடனான சந்திப்பின் போது, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டை குறித்து டொனால்டு ட்ரம்ப் கூறியதா
-
இ.பி.எஸ். இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
27 Aug 2025சென்னை : சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவ
-
ராஜஸ்தானில் தேர்வு மோசடி: 415 பேருக்கு வாழ்நாள் தடை
27 Aug 2025ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் அரசு தேர்வுகளில் மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் முழுவதும் அரசு தேர்வுகளை எதிர்கொள்ள தடை விதிக்கப்பட்டது.
-
வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் டிரில்லியன் டாலர்களை கஜானாவில் சேர்த்துள்ளோம் : அதிபர் ட்ரம்ப் பெருமிதம்
27 Aug 2025வாஷிங்டன் : வெளிநாடுகள், பில்லியன்கள் அல்ல... டிரில்லியன் டாலர்களை எங்களுடைய கஜானாவுக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளன என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-08-2025.
28 Aug 2025 -
அமெரிக்காவின் வரிவிதிப்பால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.4.2 லட்சம் கோடி பாதிப்பு ஏற்படும் சூழல்
27 Aug 2025மும்பை : அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக இந்தியாவின் ரூ. 4.2 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
-
பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் நிலுவை: புதுச்சேரி தி.மு.க. கண்டனம்
27 Aug 2025புதுச்சேரி : அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு 4 மாத நிலுவை சம்பளத்தை தராவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா எச்சரித்துள்ள
-
உத்தரகண்ட் வெள்ள பாதிப்பு: பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித்தொகை
27 Aug 2025டேராடூன் (உத்தரகண்ட் : உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டம், தாராலி நகரத்தில் திடீரென பெய்த கனமழை வெள்ளத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வ
-
எவ்வளவு நெருக்கடி வந்தாலும் நம் விவசாயிகளை நிச்சயம் காப்பேன்: பிரதமர் உறுதி
27 Aug 2025புதுடெல்லி : நாட்டில் உள்ள சிறு நிறுவனங்கள், விவசாயிகளை பாதுகாக்கும் விஷயத்தில் எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் கவலையில்லை’’ என்று பிரதமர் நரேந்திர மோடி
-
அமெரிக்க வரி உயர்வால் திருப்பூரில் பாதிப்பு பிரதமருக்கு முதல்வர் மீண்டும் வலி்யுறுத்தல்
28 Aug 2025சென்னை, அமெரிக்கா உயர்த்தியுள்ள வரியால் திருப்பூர் பின்னலாடை தொழில் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
-
அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள்-பணியாளர்களை காக்க நிவாரணம் மற்றும் சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேணடும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
28 Aug 2025சென்னை, இந்தியப் பொருட்களின் மீதான அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக பொதுநல வழக்கு மட்டுமே தாக்கல் செய்யலாம்: ஐகோர்ட்
28 Aug 2025சென்னை, பரந்தூர் விமான நிலையம் அமைக்க, ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள ஏரியை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுநல வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என நீதிபத
-
2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் - டி.டி.வி. தினகரன்
28 Aug 2025தஞ்சாவூர், 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.