எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை நேற்று போட்டுக்கொண்டார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதில் 60 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர். அந்த வகையில், பா.ஜ.க. மூத்த தலைவரான எல்.கே. அத்வானி கடந்த மாதம் 9-ம் தேதி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டார்.
இந்நிலையில், சுமார் ஒரு மாதம் கழித்து எல்.கே. அத்வானி கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை நேற்று போட்டுக்கொண்டார். 93 வயதான எல்.கே. அத்வானிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


