முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மன்மோகன்சிங் இன்று ஈரான் புறப்பட்டு செல்கிறார்

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.- 28 - பிரதமர் மன்மோகன்சிங் இன்று ஈரான் புறப்பட்டு செல்கிறார்.  ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெறும் அணி சேரா நாடுகள் மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். வளை குடா நாடுகளில் ஒன்றான ஈரானிடம் இருந்துதான் இந்தியா அதிகமான கச்சா எண்ணையை வாங்குகிறது.  ஆனால்  அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் ஈரானை ஒதுக்கி வைத்துள்ளன.  ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்து வருவதால் அந்நாட்டுக்கு எதிராக பல பொருளாதார தடைகளையும் மேலை நாடுகள் விதித்துள்ளன. இந்த நிலையில்  ஈரான் தலைநகர் டெஹ்ரானில்  அணி சேரா நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக  பிரதமர் மன்மோகன்சிங் இன்று ஈரான் புறப்படு செல்கிறார். கடந்த 2001-ம் ஆண்டு  அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்  ஈரான் நாட்டிற்கு  பயணம் செய்தார். அதன் பிறகு  இப்போது ஈரான் நாட்டிற்கு பயணம் செய்யும் முதல் பிரதமர் மன்மோகன்சிங்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானுடன் எந்த உறவையும் வைத்துக்கொள்ள கூடாது என்று இந்தியாவை அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள்  வலியுறுத்தி வரும் வேளையில் இந்திய பிரதமர் ஈரான் செல்வது முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக  அமைந்துள்ளது. 

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை  செயலாளர்  ரஞ்சன் மத்தாய் கூறுகையில்,  ஈரானில்  இந்தியர்கள் அதிகமாக இருப்பதால் மட்டுமல்ல ஈரானிலிருந்துதான் இந்தியா  அதிகமான கச்சா எண்ணையை வாங்குகிறது. அது மட்டுமல்ல ஆப்கானிஸ்தான் புனரமைப்பு பணிகளிலும் ஈரான்  இந்தியாவுடன் ஒத்துழைக்கிறது. எனவேதான் மன்மோகன்சிங் அந்நாட்டிற்கு செல்கிறார் என்றார். ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையே  வர்த்தக உறவுகள் அதிகரித்து வருகின்றன என்றும் அவர் கூறினார். ஈரான் செல்லும் பிரதமர் மன்மோகன்சிங் ஈரான் நாட்டு ஜனாதிபதி  மெஹ்மூத் அகமதிநிஜாத்,  ஈரான்  தலைவர்  அயதுல்லா  அலி கோமேனி ஆகியோரையும் சந்தித்து முக்கிய பேச்சு நடத்துவார்.

அப்போது அவர்களுடன் இரு நாட்டு உறவுகள் மற்றும்  சர்வதேச பிரச்சனைகள் குறித்து  மன்மோகன் சிங் விவாதிப்பார்.

பிரதமர் மன்மோகன்சிங்கின் இந்த ஈரான் பயணம் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக அமைந்துள்ளது.

--------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago