Idhayam Matrimony

மேற்கு வங்காளத்தில் பாஜக முக்கிய தலைவர் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார்

திங்கட்கிழமை, 21 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. இந்த முறை எப்படியும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என தீவிரமாக களப்பணியாற்றிய பாஜகவின் கனவு தகர்ந்தது. தேர்தலுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரசில் இருந்து பாஜகவிற்கு சென்றவர்கள் சிலர் மீண்டும் தாய் கட்சிக்கே திரும்பி உள்ளனர். 

இந்நிலையில், அலிபூர்தார் மாவட்ட பாஜக தலைவர் கங்கா பிரசாத் சர்மா இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கொல்கத்தாவில் கட்சியின் மூத்த தலைவர்களான சுகேந்து சேகர் ராய், முகுல் ராய் ஆகியார் முன்னிலையில் கட்சியில் சேர்ந்தார். 

பின்னர் பேசிய கங்கா பிரசாத் சர்மா, ‘பாஜகவில் பழைய தொண்டர்களுக்கு சரியான பொறுப்புகள் வழங்கப்படுவதில்லை. முடிவெடுக்கும் செயல்பாட்டில் பாகுபாடுகள் இருந்தன. 2-3 பேர் டிக்கெட் விநியோகித்தனர். கைலாஷ் விஜயவர்கியா அவர்களில் ஒருவர். கட்சியின் தோல்வி மற்றும் தற்போதைய நிலைக்கு அவர் பதிலளிக்க வேண்டும். அத்துடன் பொதுச்செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து