எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பை போட்டியிலும் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பந்துவீசப் போவதில்லை. அவருக்குப் புதிய ரோல் அதாவது ஆட்டத்தை முடிக்கும் ஃபினிஷிங் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அறுவை சிகிச்சை...
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா முதுகில் அறுவை சிகிச்சை செய்துகொண்டபின் எந்தப் போட்டியிலும் இதுவரை சரிவரப் பந்து வீசியதில்லை. ஆஸ்திரேலியத் தொடரில் ஹர்திக் பாண்டியா பந்து வீசாத நிலையில் ஏன் நீடிக்கிறார் என்ற கேள்வி எழுந்தபின் சில போட்டிகளில் பந்து வீசினார். இங்கிலாந்து அணி இந்தியா வந்திருந்தபோதும், ஹர்திக் பாண்டியா சில போட்டிகளில் மட்டுமே பந்து வீசினார்.
டி-20 அணியில்...
ஆனால், ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு போட்டியில் கூட ஹர்திக் பாண்டியா பந்து வீசவில்லை. பேட்டிங்கிலும் சரிவர சோபிக்கவில்லை. இதனால், ஐ.பி.எல் சீசன் முழுவதுமே அவுட் ஆஃப் ஃபார்மிலேயே வந்து, அதோடு வெளியேறிவிட்டார். உடற்தகுதியில்லாமல் தவிக்கும் ஹர்திக் பாண்டியா டி20உலகக் கோப்பை போட்டிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியில் ப்ளேயிங் லெவனில் இடம் பெற்றால், கூடுதலாக ஒரு பந்துவீச்சாளருக்காகத்தான் சேர்க்கப்படுவார். ஆனால், இந்த உலகக் கோப்பை போட்டியிலும் ஹர்திக் பாண்டியா பந்துவீசமாட்டார், பேட்ஸ்மேனாக மட்டுமே செயல்படுவார் என்று அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய பொறுப்பு...
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் டி20 உலகக் கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு புதுவிதமான பாத்திரத்தை வழங்க பிசிசிஐ, அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து இந்திய அணி வட்டாரங்கள் கூறுகையில், “ஹர்திக் பாண்டியா இன்னும் 100 சதவீதம் உடற்தகுதி பெறவில்லை. ஆதலால், பந்துவீச முடியாது. ஆனால் அவரின் அனுபவத்தைப் பயன்படுத்த முடியும். கடினமான, நெருக்கடியான சூழலில் போட்டியை எளிதாக பேட்டிங் மூலம் முடித்துக் கொடுக்கும் திறமை பாண்டியாவுக்கு இருக்கிறது.
பேட்ஸ்மேனாக...
ஆதலால், இந்த உலகக் கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்டியா ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் என்ற கணக்கில் போட்டியை ஃபினிஷிங் செய்யும் வீரராகவே களமிறங்குவார். ஹர்திக் பாண்டியா உடல்நிலையைத் தொடர்ந்து கவனித்து வருகிறோம். இப்போதுள்ள சூழலில் ஹர்திக் பாண்டியாவை பேட்ஸ்மேனாக மட்டுமே அணி நிர்வாகம் பார்க்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தோனி செய்த ஃபினிஷிங் பணியைத்தான் உலகக் கோப்பையில் ஹர்திக் செய்யப் போகிறார். ஹர்திக் பாண்டியா முழு உடற்தகுதி பெற்றால் நிச்சயமாக பந்துவீச்சிலும் ஈடுபடுத்தப்படுவார்” எனத் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


