எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்துபவர் மட்டுமல்லாமல் போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்டதாக மும்பை ஐகோர்ட்டில் என்.சி.பி. தெரிவித்துள்ளது.
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த 2-ந் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலர் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆர்யன்கான் மற்றும் சிலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.
கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கான் கடந்த 8-ம் தேதி முதல் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி 2 முறை கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், 2 முறையும் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதற்கிடையில், சொகுசு கப்பலில் போதை விருந்தில் பங்கேற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஆர்யன் கான் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி 3-வது முறையாக கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மும்பை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆர்யன்கான் போதைப்பொருள் பயன்படுத்துவர் மட்டுமல்ல அவர் போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்டுள்ளார். மேலும், வழக்கில் தொடர்புடைய சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை கலைக்கவும் ஆர்யன் கான் முயற்சித்துள்ளார். இதனால், அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என ஐகோர்ட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


