எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நூறாண்டுகள் பழமையான மர்மங்கள் நிறைந்த அதிசய கிணறு
நூறாண்டுகள் பழமையான மர்மங்கள் நிறைந்த அதிசய ஊற்று கிணறு ஒன்று உள்ளது. எங்கே.. இந்தியாவிலா என்றால்.. அதை பற்றி கேட்கவே வேண்டாம்.. பல நூறு ஆண்டுகள் பழமையான குளங்கள், கிணறுகள் போன்றவற்றுக்கு நம் நாட்டில் பஞ்சமே இல்லை.. இது அமைந்துள்ளது பிரான்சில். அங்குள்ள Burgundy என்ற பிராந்தியத்தில் அமைந்துள்ள இது Fosse Dionne spring என பிரபலமாக அறியப்பட்டுள்ளது. கடந்த 1700 களில் இதை சுற்றிலும் பொது குளியலறைகள் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதில் விநாடிக்கு 311 லிட்டர் வெளியேறுகிறது. சீசன் நேரங்களில் இது 3 ஆயிரம் லிட்டராகவும் அதிகரிக்கும். ரோமானியர்களால் குடிநீராகவும், செல்டியர்களால் புனித நீராகவும் இது கருதப்பட்டு வந்தது. பூமிக்கு அடியில் மிகவும் ஆழமாகவும், நீண்டு செல்லும் சுரங்க பாதைகளையும் கொண்டதாக இதில் எங்கிருந்து நீர் ஊற்று வருகிறது என்பது கண்டுபிடிக்க முடியாத மர்மமாகவே உள்ளது. உள்ளே சென்றவர்கள் யாரும் திரும்ப வருவதில்லை என்ற வதந்தி பரவியதையடுத்து அதற்குள் டைவர்கள் குதிக்க அரசு தடை விதித்திருந்தது. இதனால் இதன் மர்மம் நீடித்தே வந்துள்ளது. கடந்த ஆண்டு தொழில்முறை டைவர் ஒருவர் முறையான அனுமதி பெற்று அதன் உள்பகுதிகளுக்கு சென்று படம் பிடித்து திரும்பினார். இருந்த போதிலும் அவராலும் நீர் ஊற்று எங்கிருந்து வருகிறது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. மிகப் பெரிய அரண்மனை அளவுக்கு பூமிக்கு அடியில் உள்ள நீர் சுரங்கத்தில் அவர் படம் பிடிப்பு நடத்திய காட்சிகள் உலகம் முழுவதும் பரவி இந்த ஊற்று நீர் கிணற்றுக்கு மேலும் விளம்பரத்தை தேடி தந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


