முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் இந்திய அணி ஜெர்மனியை எதிர்கொள்கிறது

வியாழக்கிழமை, 2 டிசம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புவனேஸ்வர்: ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் காலிறுதியில் பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி. அரையிறுதியில் ஜெர்மனியை எதிர்கொள்கிறது.

காலிறுதிப் போட்டி...

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதில், நடப்பு சாம்பியனான இந்திய அணி, நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், ஐரோப்பாவின் மிகவும் வலுவான அணியான பெல்ஜியம் அணியை எதிர்கொண்டது. 

கடும் நெருக்கடி... 

துவக்கத்தில் சில நிமிடங்கள் பெல்ஜியம் வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடி இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். எந்த வாய்ப்பும் கொடுக்காமல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினர். அதன்பின்னர் இந்திய வீரர்கள் சுதாரித்து ஆடினர். 21வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில், இந்திய வீரர் சர்தானந்த் திவாரி கோல் அடித்து அசத்தினார். அதன் பின்னர் இறுதி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. எனவே, இந்தியா 1-0 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிது.

ஜெர்மனியுடன்...

2016ல் லக்னோவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின்போது, இறுதிப்போட்டியில் பெல்ஜியம் அணியை இந்தியா 2-1 என வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்த முறையும் பெல்ஜியம் அணியை வீழ்த்தி உள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி அணியுடன் இந்தியா மோத உள்ளது. 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி, காலிறுதியில் 3-1 என ஸ்பெயின் அணியை வென்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து