முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேசன் கடைகள் மூலம் தக்காளியை மலிவு விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை : அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

வெள்ளிக்கிழமை, 20 மே 2022      தமிழகம்
Periyasamy 2021 10 22

Source: provided

சென்னை : தேவையின் அடிப்படையில் நியாய விலைக்கடைகள் மூலமாக தக்காளியை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளியை மலிவு விலையில் விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது:-

தமிழகத்தில் பருவமழை காரணமாக தக்காளியின் விலை வெளிச்சந்தையில் உயர்ந்துள்ளதை கட்டுப்படுத்தி, மக்களுக்கு மலிவு விலையில் தரமான தக்காளி கிடைக்க, தமிழக அரசு கூட்டுறவுத் துறையின் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. 

2021 வடகிழக்கு பருவமழை காலத்தில், கூட்டுறவுத்துறை நடத்தி வரும் 65 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 27.11.2021 முதல் 30.12.2021 வரை 150 மெட்ரிக் டன் அளவிற்கு தக்காளியும் இதர காய்கறிகள் 1,100 மெட்ரிக் டன் அளவிற்கும் ரூ. 3 கோடி மதிப்பிற்கு கொள்முதல் செய்யப்பட்டு தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ. 45 முதல் ரூ. 55 வரை விற்பனை செய்யப்பட்டது.

தற்போது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மழை பெய்து வருவதால் தக்காளியின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. தக்காளி கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு துறை நடத்தி வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் முதல் கட்டமாக 4 மெட்ரிக் டன் அளவிற்கு தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு ஒரு கிலோ ரூ. 70 முதல் ரூ. 85 வரை விற்பனை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தக்காளியின் வெளிச்சந்தை விலை கட்டுப்படுத்தப்படும் வரை இந்த நடவடிக்கை நேற்று முதல் அனைத்து மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுத்துறை நடத்தி வரும் 65 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் மேற்கொள்ளப்படும்.  மேலும் தேவையின் அடிப்படையில் நியாய விலைக்கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து